செக்கச்சிவந்த வானம் கதை

  செக்கச்சிவந்த வானம்  இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, ஜோதிகா, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ்,  அதிதி ராவ் ஹைதரி, பிரகாஷ் ராஜ், தியாகராஜன், மன்சூர் அலி கான் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் மணிரத்னம் தயாரிக்க, எ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

  கதை : 

  ரவுடியாக வாழ்க்கையை ஆரம்பித்து, மிகப்பெரிய தொழிலதிபராக வளர்ந்து நிற்பவர் சேனாபதி (பிரகாஷ்ராஜ்). சேனாபதி - ஜெயசுதா தம்பதிக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். மூத்த மகன் வரதன் (அரவிந்த்சாமி). அவருடைய மனைவி சித்ரா (ஜோதிகா), துணைவி பார்வதி (அதிதி ராவ் ஹிதாரி). சென்னையில் அப்பாவுக்கு துணையாக அடிதடி வேலைகளை செய்து வருகிறார்.

  இரண்டாவது மகன் தியாகு (அருண் விஜய்). மனைவி ரேணு (ஐஸ்வர்யா ராஜேஷ்) மற்றும் குழந்தைகளுடன் துபாயில் ஷேக்குகளுடன் சேர்ந்து தொழில் செய்து வருகிறார்.

  மூன்றாவது மகன் எத்தி (சிம்பு). செர்பியாவில் காதலி சாயாவுடன் (டயானா எர்ரப்பா) இணைந்து ஆயுதம் கடத்தும் தொழில் செய்து வருகிறார்.

  இவர்கள் தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். இப்போது கதைக்கு போகலாம். தந்தை சேனாபதியின் இடத்தை பிடிக்க மூன்று மகன்களுக்கும் ஆசை. இந்நிலையில் சேனாபதி மற்றும் அவரது மனைவி மீது திடீர் தாக்குதல் நடக்கிறது. இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். சேனாபதியை கொல்ல முயன்றது எதிரணியைச் சேர்ந்த சின்னப்பதாஸ் (தியாகராஜன்) என சந்தேகப்படுகிறார் வரதன். உண்மையில் சேனாபதியை கொல்ல முயன்றது யார் என்பதே படத்தின் கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie செக்கச்சிவந்த வானம் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).