ராட்சசன் முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு, அமலா பால் நடித்த அதிரடி திரைப்படம்.
கதை :
சினிமா இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணிக்கும் நாயகன் அருண் (விஷ்ணு விஷால்), குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக போலீஸ் பணியில் சேர்கிறார். அப்போது ஒரு ராட்சசன், பள்ளி மாணவிகளை கடத்தி கொடூரமாக கொலை செய்கிறார். தனது சினிமா கதைக்காக அருண் சேகரித்து வைத்த தகவல்களின் அடிப்படையில் சைக்கோ கொலைக்காரனை தேட ஆரம்பிக்கிறார். அந்த ராட்சசன் யார்? எதற்காக இந்த கொலைகளை செய்கிறான்? அருண் அவரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே படம்.