X
எஸ் எ அசோகன்
Actor

எஸ் எ அசோகன் பயோடேட்டா

எஸ்.எ. அசோகன், பிரபல தமிழ் திரைப்பட குணச்சித்திர நடிகர் மற்றும் மேடை நாடக நடிகர் ஆவார். “அன்டனி” என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர் தமிழ் திரையுலகில் அசோகன் என்ற பெயரில் பிரபலமானவர். இவர் பெரும்பாலும் வில்லன் மற்றும் வில்லன்களை சார்ந்து இருக்கக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் புகழ் பெற்றுள்ளார்.


பிறப்பு


எஸ்.. அசோகன், 1931ல் திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். இவர் தனது சிறுவயதில் இருந்து மேடை நாடகங்களிலும், மேடை பேச்சாளராகவும் பல போட்டியில் கலந்து பல பரிசுகளை வென்றவர். இவர் திருச்சியில் உள்ள ஸ்ட. ஜோசப் கலைக்கல்லூரியில் தனது இளங்கலை பட்டத்தினை வென்றுள்ளார்.

 

திரைப்பட அனுபவம்


திருச்சியில் உள்ள கலைக் கல்லூரியில் தனது இளங்கலை பட்டத்தினை வென்ற எஸ்.. அசோகன், சினிமா துறையில் ஆசை கொண்டு பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான "டி ஆர் ரமணா" என்பரிடம் உதவியாளராக பணியாற்றி, அவரிடம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இவரின் உதவியில் திரைத்துறையில் நடிகராக அறிமுகமானவர்.

 

அசோகன் 1953ம் ஆண்டு வெளியான "ஒவ்வையார்" திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் 1959ம் ஆண்டு "பெண் குலத்தின் பொன்விளக்கு" என்ற திரைப்படத்தில் நடித்து தனக்கென திரைத்துறையில் ஒரு அங்கீகாரத்தினை பெற்றுள்ளார்.

 

இவரது திரைப்பயணத்தில் இவர் அன்டனி என்ற பெயரினை அசோகன் என்ற பெயர் மாற்றிக் கொண்டு கப்பலோட்டிய தமிழன் (1961), பாசம் (1962) என பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

 

1960 - 1970ம் ஆண்டு வெளியான படங்களில் இவர் வில்லன் கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து தமிழ் திரையில் புகழ் பெற்றுள்ளார். இவர் நடித்த திரைப்படங்களில் 1964ம் ஆண்டு வெளியான கர்ணன் திரைப்படத்தில் துரியோதனன் கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டு பல விருதுகளை வென்று குவித்துள்ளது.

 

எஸ் எ அசோகன் மாரடைப்பு காரணமாக 1982 நவம்பர் 19ல் உயிரிழந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+