X
சனம் செட்டி
Actress

சனம் செட்டி பயோடேட்டா

சனம் ஷெட்டி இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் திரையுலகில் மாடலிங் பணியில் பிரபலமானவர். இவர் 2016-ஆம் ஆண்டில் மிஸ்.சவுத் இந்தியா பட்டத்தினை வென்றுள்ளார்.

பிறப்பு 
 
இவர் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரை பிறப்பிடமாய் கொண்டவர். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளை சரளமாக பேசுபவர். இதனை கொண்டே இவர் தென்னிந்திய திரைத்துறையில் பிரபலமாக நடித்து வருகிறார்.

பெங்களூரில் பிறந்துள்ள இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவர் திரைத்துறையில் பணியாற்றுவதற்கு முன்னர் கணினி பொறியாளராக வெளிநாட்டில் பணியாற்றிவந்துள்ளார்.

திரையுலக தொடக்கம்

திரைத்துறையில் இவரின் முதல் படமான அம்புலி திரைப்படத்தின் பிரபலத்தின் மூலம் இவர் திரையுலகில் அறியப்படுகிறார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்கள் முக்கிய மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் தர்ஷன்

இவர் 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர் தர்ஷன்-யை காதலித்து வருவதாக திரையுலக வட்டாரங்களில் பேச்சுகள் தொடர்ந்து வருகிறது. இதனை தொடர்ந்து சனம் ஷெட்டி "தர்ஷனும் நானும் காதலித்து வருவதாக" பத்திரிக்கை நிறுவனங்களுக்கு அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டுள்ளார். 2019-ம் ஆண்டின் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்துள்ளனர்.

இவர்களின் காதல் முறிவு 2020-ம் ஆண்டு சமூக வலைத்தளம் மற்றும் பத்திரிகைகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4

விஜய் தொலைக்காட்சி 2020-ஆம் ஆண்டு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இவர் பங்குபெற்றுள்ளார்.

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+