X
செந்தில்
Actor

செந்தில் பயோடேட்டா

செந்தில், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்.

செந்தில் 1951ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் என்னும் ஊருக்கு அருகில் உள்ள இளஞ்செம்பூர் என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் இராமமூர்த்தி. செந்திலின் இயற்பெயர் முனுசாமி. இவரது உடன்பிறப்புகள் ஆறு பேர். செந்தில் மூன்றாவதாகப் பிறந்தார். ஐந்தாவது வகுப்பு வரை படித்தார். தந்தை திட்டிய காரணத்தால் தனது 12ம் வயதில் ஊரை விட்டு ஓடி வந்தார்.

முதலில் ஒரு எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் ஒரு மதுபானக் கடையில் பணி புரிந்தார். பின்னர் நாடகத்தில் சேர்ந்து தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டார். இது அவர் திரையுலகத்தில் நுழைய உதவியாக இருந்தது. சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு மலையூர் மம்பட்டியான் படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தனது பெற்றோர்களை 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்க சென்றார். அவர்களால் இன்முகத்துடன் வரவேற்கப்பட்டார். 1984ம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் மணிகண்ட பிரபு. இவர் பல் மருத்துவர். மற்றொருவர் ஹேமச்சந்திர பிரபு. மணிகண்ட பிரபு, ஜனனி பிரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவர் ஏறத்தாழ 260 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரும் கவுண்டமணியும் சேர்ந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தவை.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+