X
சௌந்தர்யா ரஜினிகாந்த்
Director/Producer

சௌந்தர்யா ரஜினிகாந்த் பயோடேட்டா

செளந்தர்யா ரஜினிகாந்த் முதன்மையாக தமிழ் சினிமாவில் பணியாற்றும் வரைகலை வடிவமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் ஆக்கர் பிக்சர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் ஆவார். ஒரு வரைகலை வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய செளந்தர்யா, அவரது தந்தை ரஜினிகாந்த் நடித்த படங்களில் தலைப்புக் காட்சிகளை வடிவமைக்கத் தொடங்கினார். அவர் கோவா திரைப்படத்தின் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க திரைப்பட தயாரிப்பாளராகவும் ஆனார். ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தில் ஒரு இயக்குனராக அறிமுகமானார்.

இவர் சென்னையில் உள்ள ஆசிரமம் மெட்ரிக் மேல் நிலை பள்ளியில் தனது கல்வியை முடித்தார், இவர் ரஜினி - லதா இவர்களுக்கு இரண்டாவது மகளாக 1984 -ம் ஆண்டு செப் 20 -ல் பிறந்தார். 1999 -ம் ஆண்டு வெளிவந்த ரஜினியின் படையப்பா திரைப்படத்தின் வரைகலை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.  பின்னர் பெரும்பாலும் ரஜினியின் படங்களில் வரைகலை வடிவமைப்பாளராக பணியாற்றியதுடன், மஜா, சண்டக்கோழி, சிவகாசி, கத்தி என பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

2010 -ம் ஆண்டு கோவா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி, கோச்சடையான் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் 2017 -ம் ஆண்டு தனுஷின் வேலை இல்லா பட்டதாரி 2  திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.

இவர் செப் 3, 2010 -ம் ஆண்டு அஸ்வின் ராம்குமார் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்தார், இவர்களுக்கு மகனாக வெட் என்பவர் பிறந்துள்ளார். பின்னர் 2016 -ம் ஆண்டு செப்டம்பர்-ல் கருத்து வேறுபாடு அடிப்படையில் விவாகரத்து நடந்தது. பின்னர் இவர் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 8ல் விசாகன் வணங்காமுடி என்பவருடன் மருமணம் செய்துள்ளார். விசாகன் வணங்காமுடி திரைப்பட தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+