சௌந்தர்யா சத்தியநாராயணன், சௌந்தர்யா என்னும் புனைப்பெயர் கொண்டு திரையுலகில் அறியப்படும் இவர், இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களின் முன்னணி நடிகை ஆவார்.
இவர் 1992-ம் ஆண்டு "நன்னை தங்கை" என்ற கன்னட திரைப்படத்தின் வாயிலாக திரைத்துறைக்குள் அறிமுகமான இவர், 1992-ம் ஆண்டு "ராய்த்து பாரதம்" என்ற தெலுங்கு திரைப்படத்திலும், 1993-ம் ஆண்டு தமிழில் "பொன்னுமணி" திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
இவர் தமிழில் பொன்னுமணி, படையப்பா, அருணாச்சலம் போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் திரைத்துறை மட்டுமின்றி பா.ஜா.க வின் பிரமுகராக அரசியல்வாதியாகவும் திகழ்தவர். இவர் 2004 ஆம் ஆண்டு, ஏப்ரல் 17ல் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள உலங்கு வானூர்தியில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் இறந்தார். மேலும் அப்போது அவர் கர்ப்பவதியாக இறந்தார்.
இவர் தமிழ் திரையுலகில் இறுதியாக 2003-ம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் உடன் சொக்கத்தங்கம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.