twitter
    Celebs»Srividya»Biography

    ஸ்ரீவித்யா பயோடேட்டா

    ஸ்ரீவித்யா இந்தியாவில் புகழ்பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். கர்நாடக இசை பாடகி எம். எல். வசந்தகுமாரியின் மகள். இவர் 1970களில் இருந்து 2000களின் தொடக்கம் வரை நடித்து வந்தார். 2003ஆம் ஆண்டு மார்புப் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட இவர் 2006, அக்டோபர் 19ஆம் தேதி இறந்தார்.

    இவர் 1967-ம் ஆண்டு திருவருட்ச்செல்வர் திரைப்படத்தில் நாட்டிய பெண்மணியாக தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளின் பல திரைப்படங்கள் நடித்துள்ளார்.