X
சுசித்ரா
Singer

சுசித்ரா பயோடேட்டா

சுசித்ரா தமிழ் திரையுலக பாடகி, ரேடியோ ஜாக்கி என திரைத்துறையில் பணியாற்றி வருபவர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 100 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

இவர் ரேடியோ மிர்ச்சியில் "ஹலோ சுசி" நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றியவர் ஆவார். இவர் ரேடியோ மட்டுமில்லாமல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பாடல் போட்டிகளின் நடுவராகவும் பணியாற்றியுள்ளார்.

பிறப்பு
சென்னையில் பிறந்துள்ள இவர், கேரளா மாநிலத்தில் தனது கல்வியினை பயின்றுள்ளார். பின்னர் கோவையில் தனது இளங்கலை பட்டத்தினை வென்றுள்ளார். இவர் சிறு வயதிலிருந்தே இசையின் மேல் ஆர்வம் கொண்டு இசையை கற்று வந்துள்ளார்.

திரையுலக பயணம்
சுசித்ரா தனது கல்வியை முடித்த பின்னர், ரேடியோ மிர்ச்சி-யில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கியுள்ளார். அங்கு "ஹலோ சென்னை" என்ற நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வந்துள்ள இவர், அந்நிகழ்ச்சியில் மூலம் பிரபலமாகியுள்ளார். 

இவர் திரையுலகில் சிரேயா சரன், தமன்னா, மாளவிகா போன்ற திரையுலக நடிகைகளுக்கு டப்பிங் குரல் அளித்து வந்துள்ளார். பின்னர் இவர் திரைப்பட பாடல்கள் பல பாடியுள்ளார்.

பிரபலம்
இவர் திரைப்பட பாடல்கள் பல பாடியுள்ளார், இதற்காக இவர் பல விருதுகளையும் வென்றுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளின் பாடல்களை பாடி பிரபலமான இவர், விஜய் தொலைக்காட்சியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர், சன் தொலைக்காட்சியில் சன் சிங்கர் போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

திருமணம்
இவர் தமிழ் திரையுலகின் நடிகரான கார்த்திக் குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

சர்ச்சை
சமீப காலமாகவே இவர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். 2017-ஆம் ஆண்டு "சுச்சி லீக்ஸ்" என்ற ஹாஸ்டக்ஸ் அடிப்படையில் இவர் சமூக வலைத்தளங்களில் பிரபலமானார்.

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+