Celebs»Sunny Leone»Biography

    சன்னி லியோன் பயோடேட்டா

    சன்னி லியோன்  (கரெஞ்சித் கவுர் வோரா) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் இந்திய வம்சாவளியை சார்ந்த இந்தோ-கன்னடியன் ஆவார். கனடிய பாலிவுட் நடிகையும், பெண் தொழிலதிபரும், முன்னாள் பாலுணர்வுக் கிளர்ச்சியத் திரைப்பட நடிகையுமாவார். 

    இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் நடித்து பாலிவுடில் அறிமுகமானார். இவரின் ஆபாச வலைதளத்தால் இவர் இந்தியாவில் இருக்கக்கூடாது என எதிர்ப்பு இவருக்கு ஏற்பட்டது.

    ஹிந்தி திரைப்படங்களில் நடித்து திரையுலகில் வலம்வந்த இவர், 2014-ம் ஆண்டு தமிழில் வடகறி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர். பின்னர் இவர் தமிழில் வீரமாதேவி திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். 

    இவர் திரைப்படங்களை தொடர்ந்து தொலைக்காட்சியிலும் தொகுப்பாளர், செய்தியாளர், போட்டியாளர் என நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இவர் 2011-ம் ஆண்டு பிக்-பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ஹிந்தி திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.