X
சுரபி
Actor/Actress

சுரபி பயோடேட்டா

சுரபி தமிழ் திரையுலகில் நடித்து வரும் ஒரு இந்திய நடிகையாவார். 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இவன் வேறமாதிரி எனும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரை உலகத்திற்கு அறிமுகமானார்.

கலைக் கல்லூரியில் நுண்கலை இளநிலை பட்டப் படிப்பினை மேற்கொண்ட போது திரைப்பட மற்றும் மாடலிங் துறைகளில் சுரபிக்கு ஆர்வம் ஏற்பட்டது. விக்ரம் பிரபுவின் இரண்டாவது படம் இவன் வேறமாதிரியில் விக்ரம் பிரபுவுக்கு இணையாக நடித்தார். இத்திரைப்படத்தில் பப்ளி, அப்பாவி பெண் பாத்திரம் ஏற்று நடித்த சுரபி இயல்பான நடிப்பினை வெளிபடுத்தினார். இதன் மூலம் விஜய் விருதுகள் மற்றும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த பெண் அறிமுக நாயகி விருதுற்காக பரிந்துரை செய்யப்பட்டார்.

அடுத்த 2014இல் வெளிவந்த வேல்ராஜ் இயக்குனராக அறிமுகமான வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் துணைப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ஜீவா திரைப்படத்தில் நடிக்க முன்னதாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் பரீட்சை காரணமாக அத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொண்டார். எனினும் இத்திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார். இவர் தற்போது ஒரு தமிழ் படம் மற்றும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகின்றார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+