twitter
    Celebs»Suresh Gopi»Biography

    சுரேஷ் கோபி பயோடேட்டா

    சுரேஷ் கோபிநாதன் நாயர் என்ற முழுப் பெயரின் சுருக்கமே சுரேஷ் கோபி என்பதாகும். இவர் மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் ஜுன் 26, 1960ல் பிறந்தார். இவரது பெற்றோர் ஞானலட்சுமி மற்றும் கோபிநாதன் பிள்ளை ஆவார்கள். மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தாலும் ஒரு சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது மனைவியின் பெயர் ராதிகா. இவருக்கு கோகுல், பாக்யா, பாவனா, மற்றும் மாதவ் என்ற நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். சுரேஷ் கோபி தற்போது சாஸ்தமங்களத்தில் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனிதநேய முயற்சிகள் மூலம் மிகவும் பிரபலமானவர்.