தனிகெல்லா பரணி பயோடேட்டா

    தனிக்கெல்லா பரணி இந்திய திரைப்பட நடிகர், வசன எழுத்தாளர், கவிஞர், கதை எழுத்தாளர், மற்றும் தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் இதுவரை சுமார் 750 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். இவர் தெலுங்கு மட்டுமில்லாமல், தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் பணியாற்றி வருகிறார். இவர் ஆந்திராவின் நந்தி விருதினையும் பெற்றுள்ளார். திரைப்படங்கள் மட்டுமில்லாது இவர் பல்வேறு புத்தகங்களும் எழுதியுள்ளார்.