X
வேல்முருகன்
Singer/Actor/Lyricst

வேல்முருகன் பயோடேட்டா

வேல்முருகன், பிரபல தென்னிந்திய பின்னணி பாடகர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் குத்து பாடல்கள் மற்றும் நாட்டுப்புற பாடல்கள் பாடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று புகழ் பெற்ற இவர், தொடக்கத்தில் சுப்ரமணியபுரம் படத்தில் இடம் பெற்ற "மதுர குலுங்க குலுங்க" என்ற திரைப்பாடலின் மூலம் அறிமுகமாகி பிரபாலமானவர். 



வேல்முருகனின் தமிழ் சினிமா அறிமுகம்

வேல்முருகன், 1980 மார்ச் 5ல் முத்தனை விருத்தாச்சலம் என்ற கிராமத்தில் பிறந்தவர். இந்த கிராமம் கடலூர் மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது. சிறு வயதில் இருந்து திரைப்பட பாடல்கள் மற்றும் நாட்டுப்புற பாடல்களில் அதிக ஆர்வம் கொண்டு பாட்டு பாடுவதை தனது பொழுதுபோக்காக கொண்ட இவர், பின்னர் சினிமாவில் பாட பல முயற்சிகளை மேற்கொண்டார்.

2008-ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் இசையில் உருவான "சுப்ரமணியபுரம்" திரைப்படத்தில் இடம் பெற்று மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்ற "மதுர குலுங்க குலுங்க" திரைப்பாடலை பாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பிரபலம்

"சுப்ரமணியபுரம்" திரைப்பட பாடலின் வெற்றியை தொடர்ந்து பல திரைப்பட நாட்டுப்புறம் மற்றும் குத்து பாடலை பாட வாய்ப்பினை பெற்று தமிழ் திரையுலகில் ஒரு குறிப்பிடப்படும் பாடகராக புகழ் பெற்றுள்ளார், வேல்முருகன்.

2007-ஆம் ஆண்டு முதல் இன்று வரை இவர் பாடிய பாடலுகளுக்காக பல விருதுகளை பெற்றுள்ளார் வேல்முருகன், 2019-ஆம் ஆண்டு வெளியான "அசுரன்" திரைப்படத்தில் இவர் பாடிய "கத்தரி பூவழகி" திரைப்பாடலுக்காக இவர் 7 விருதுகளை பல்வேறு விருது அமைப்புகளிடம் இருந்து பெற்றுள்ளார்.

பிக் பாஸ்

வேல்முருகன், 2020-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "பிக் பாஸ் தமிழ் சீசன் 4" நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.





Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+