Celebs»Vikram Prabhu»Biography

    விக்ரம் பிரபு பயோடேட்டா

    விக்ரம் பிரபு, தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனும் ஆவார். அவரது வீட்டில், ஒரு தாயாரிப்பு நிறுவனமான சிவாஜி புரொடக்சன்ஸ் உள்ளது. மேலும் அவரது பெரியப்பா ராம்குமார் கணேசன்  ஒரு தயாரிப்பாளர். விக்ரம் பிரபு  லட்சுமி உஞ்ஞாயானி என்பவரை திருமணம் செய்துள்ளார்.

    விக்ரம் இலண்டனில் பட்டப்படிப்புப் பயின்றார். சந்திரமுகி திரைப்படத்திற்கு உதவியாக சென்னை திரும்பிய அவர், சர்வம் திரைப்படத்தின் தயாரிப்பின்போது விஷ்ணுவர்த்தனுக்கு உதவி தயாரிப்பாளராக பணியாற்றினார். பின் லிங்குசாமியின் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படத்தில் நடித்தார். இப்படத்திற்காக யானைகள் வளர்ப்பகத்திற்கு சென்று  யானைகளுடன் பழகிவந்தார். பிறகு, அவர் இவன் வேறமாதிரி,  சிகரம் தொடு ஆகிய படங்களில் நடித்தார். தற்போது, எழில் இயக்ககும் வேலைக்கார துரை, ராதிகா சரத்குமார் தயாரிக்கும், சத்தியசிவனின் தளப்பாகட்டி  (2012-ம் ஆண்டு வெளிவந்த  மலையாள படம் உஸ்தாத் ஹோட்டலின் ரீமேக்)  போன்ற  படங்களில் நடிக்கிறார்.