விக்ரமன் இராதாகிருட்டிணன் - தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி மூலம் தன் திரைப்பயணத்தை தொடங்கி, அரசியல்வாதி, செய்தி வாசிப்பாளர், நடிகராக பணியாற்றி பிரபலமானவர்.
பிறப்பு / அறிமுகம்
விக்ரமன் இராதாகிருட்டிணன், 1988ல் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்துள்ளார். இவர் 2016ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "நடந்தது என்ன? குற்றமும் பின்னனியும்" என்ற விவாத பேச்சு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, ஒரு தொகுப்பாளராக தன் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
அனுபவம்
விக்ரமன் அதே ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் "இ.எம்.ஐ-தவணை முறை வாழ்க்கை" என்னும் தொடரில் நடித்துள்ளார். பின் "விண்ணைத்தாண்டி வருவாயா" தொலைக்காட்சி தொடரில் விக்ரம் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
விக்ரமன் இராதாகிருட்டிணன், 2020ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்துள்ளார். பின் ஒரு அரசியல்வாதியாக பணியாற்றி வந்துள்ள இவர், 2022 ஆம் ஒரு செய்தி வாசிப்பாளராக இந்து மதம் மற்றும் மதம் தொடர்பான தெய்வங்கள் குறித்து சர்ச்சைக்குரிய உரையை நிகழ்த்தி பலரால் விமர்சிக்கப்பட்டார். இதற்காக இவர் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிக் பாஸ்
விக்ரமன் இராதாகிருட்டிணன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 06 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.