சேவியர் பிறிட்டோ பயோடேட்டா

    சேவியர் பிறிட்டோ இந்திய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் ஆவார். இவர் ஒரு கல்லூரி பேராசிரியராக பணியாற்றி புகழ் பெற்றவர். பின்னர் வெள்ளித்திரையில் அறிமுகமாகி பிரபலமாகியுள்ளார்.

    சென்னையில் உள்ள பிரபல கல்லூரியான லயோலா கல்லூரியில் ஒரு ஆசிரியராக தனது பணியை தொடங்கிய இவர், தற்போது அதே கல்லூரியில் ஒரு பேராசிரியராக பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். இவர் சென்னையில் ஒரு நிறுவனத்தை உருவாக்கி உலக நாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வியாபாரங்களை செய்து வருகிறார்.

    இவர் தமிழ் வெள்ளித்திரையில் 2020-ம் ஆண்டு மாஸ்டர் திரைப்படத்தினை தயாரித்து பிரபலமான இவர், இப்படத்திற்கு முன்பே விஜய் உடன்செந்தூரபாண்டியன்”, “தேவா”, “ரசிகன்” போன்ற படங்களுக்கு தயாரிப்பாளராக பணியாற்றி உள்ளார்.