X
யாஷிகா ஆனந்த்
Actress

யாஷிகா ஆனந்த் பயோடேட்டா

யாஷிகா ஆனந்த் இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ் திரையுலகில் 2016-ஆம் ஆண்டு கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் அதே ஆண்டு துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பிரபலம்

இவர் திரைப்படங்களில் நடித்து அறிமுகமாகினும், 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர். பின்னர் இவர் அதே ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர்.

 
 
பிறப்பு

இவர் பஞ்சாப் குடும்பத்தை சார்ந்தவர், இவர் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் வாழ்ந்து வருகிறார். இவர் இணையதள பக்கங்களான இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் மாடல் பணியாற்றிவந்துள்ளார்.

திரையுலக தொடக்கம்

மாடெல்லிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமான இவர், 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால், இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

பின்னர் 2016-ஆம் ஆண்டு ஜீவா நடித்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்துள்ள இவர், பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார்.

தொலைக்காட்சி அனுபவம்

இவர் 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸ்ஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர், இத்திரைப்படத்திற்கு பின்னர் மாயா என்ற தொடரில் நடித்துள்ளார், பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி சீஸ்ஸின் 10-ல் நடுவராக பங்கேற்றுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+