ஜரினா வஹாப் பயோடேட்டா

    ஜரினா வஹாப் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 1974-ம் ஆண்டு  இஷ்க் இஷ்க் இஷ்க் என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இவர் தமிழில் 1977-ம் ஆண்டு நவரத்தினம் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் நடித்துள்ளார்.

    இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார். திரையுலகில் இவர் "சித்சோர்", "கோபால் கிருஷ்ணா"(1979), போன்ற படங்களில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களின் மூலம் பிரபலமானவர். மேலும் இவர், மலையாளத் திரைப்படங்களான "பருவ மழை", "சாமரம்", "பாலங்கள்" மற்றும் "ஆதாமிண்டெ மகன் அபூ" போன்றவற்றில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார்.