மேக நடிகையின் அம்மா மீது மோகம்?.. வேட்டையாடிய நடிகர்?.. காமெடி நடிகர் அட்ராசிட்டிஸ் இதுவா?

By Staff

சென்னை: கோலிவுட்டில் கடந்த சில நாட்களாக ஒரு விஷயம் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதாவது காமெடி நடிகர் தனது வேலையை நடிகையின் அம்மாவிடம் காண்பித்துவிட்டாராம். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பலரும் என்ன நடிகர் இவ்வளவு மோசமாகிட்டாரு என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். அதேசமயம் நடிகையை சமாளிக்க அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் தருவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம் நடிகர்.
ஃபேமஸான ஹீரோவால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் அந்த நடிகர். காமெடி நடிகர் என்ற அடையாளத்தோடு உள்ளே நுழைந்தவருக்கு ஆரம்பத்தில் வருடங்கள் தடுமாற்றமாகவே இருந்தன. இதனால் அந்த நடிகர் விரைவில் காணாமல் போய்விடுவார் என்று ஆரூடம் கூறினார்கள் திரைத்துறையில் இருப்பவர்கள். அப்போதெல்லாம் அந்த ஃபேமஸான நடிகர் தன்னுடைய படங்களில் நடிக்க அந்த நடிகருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருந்தார்.

There are Gossips in Kollywood that the actor has corrected the actress mother

சரசர வளர்ச்சி: காலம் செல்ல செல்ல காமெடி நடிகர் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் தொடர்ந்து வர ஆரம்பித்தன. கிடைக்கும் கேப்பில் எல்லாம் பஞ்ச்சுகளாக பேசி ரசிகர்களின் கவலையை பஞ்சாக பறக்கவிட்டார். இதனால் ரசிகர்கள் அவரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஒருகட்டத்தில் மூத்த காமெடி நடிகரும் ஒதுங்கிக்கொள்ள இந்த நடிகரின் காட்டில் செம மழைதான்.

அவர் இல்லைனா படம் இல்லை: ஆரம்பத்தில் தடுமாறியவருக்கு ஒருகட்டத்தில் காலம் எப்படி மாறியது என்றால் இவர் இல்லாமல் ஒரு படம்கூட ரிலீஸாகாது என்று மாறியது. உச்ச நடிகர் முதல் வளர்ந்துவரும் நடிகர்வரை அனைவருடனும் நடித்து புகழ் பெற்றார். அதன் காரணமாக பணமும் கொட்டியது, புகழும் எக்கச்சக்கமாக சேர்ந்தது. அதேசமயம் சில படங்களில் அவர் செய்த ஓவர் டோஸ் காமெடியால் விமர்சனங்களையும் சந்திக்க நேர்ந்தார்.

ஹீரோ ஆசை: அவரது ட்ராக் நன்றாக ஓடிக்கொண்டிருக்க இன்னொருவர் ஹீரோவாக அறிமுகமானார். அவரும் இப்போது டாப் ஹீரோவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த தமாஸ் நடிகர் ஹீரோவானதை அடுத்து காமெடி நடிகர் தனது ட்ராக்கை மாற்றி ஹீரோ வண்டியை ஓட்ட ஆரம்பித்தார். அதற்கு காரணம் என்னவென்றால் தனக்கு பின்னால் வந்த அவரே ஹீரோவாகி நடிக்கிறாரே; சீனியரான நம்மால் முடியாதா என்ற ஈகோதான் அது.

இப்போ நல்ல காலம்: ஹீரோவாக அறிமுகமான இந்த காமெடி நடிகருக்கு படங்கள் ஹிட்டாகவில்லை. ஆனால் சமீபத்தில் வெளியான மூன்று படங்களில் இரண்டு படங்கள் சொல்லிக்கொள்ளும்படியான ஹிட்டை நடிகருக்கு கொடுத்திருக்கிறது. இதனால் அவருக்கு இப்போ நல்ல காலம் என்று கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது. ஆனால் கூடவே இன்னொரு பேச்சும் எழுந்திருக்கிறது.

நடிகையின் அம்மாதான் டார்கெட்: அதாவது அவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கடவுள் பெயரை கொண்டது. அதில் இள நடிகை ஒருவர்தான் ஹீரோயினாக நடித்தார். வழக்கமாக தன்னுடன் நடிக்கும் நடிகைகளை பதம் பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பாராம் அந்த நடிகர். அதனால்தான் பெரும்பாலும் புதுமுகங்களையோ அல்லது வளர்வதற்கு தடுமாறிக்கொண்டிருக்கும் நடிகைகளையோத்தான் தனது படங்களில் புக் செய்வாராம். ஏனெனில் அவர்களைத்தான் எளிதாக வளைத்துப்போட முடியும் என்பது நடிகரின் தனிக்கணக்கு.

நடிகர் வீட்டில் குடித்து கும்மாளம் போட்ட இளம் நடிகை.. சினிமாவில் இருந்து காணாமல் போக அதுதான் காரணமா?


அதேபோல்தான் இந்தப் படத்தின் நடிகையையும் ஒருமாதிரி பதம் பார்த்தாராம். ஆனால் அந்த மேக நடிகையின் அம்மா மீது இந்த நடிகருக்கு மோகம் வந்துவிட்டதாம். எப்படியாவது நடிகையின் அம்மாவை அடைந்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்து நடிகையின் மூலமாகவே தூது அனுப்பினாராம். முதலில் முரண்டு பிடித்த நடிகையின் அம்மா; மகளின் எதிர்காலத்தை பணயம் வைத்து நடந்த பேச்சுவார்த்தையால் உடன்பட்டாராம். பிறகு படத்தின் ஷூட்டிங் முடியும்வரை நடிகரின் கவனம் முழுவதும் நடிகையின் அம்மா மீதே இருந்ததாம். மேலும் உங்கள் மகளுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் தருகிறேன் என்றும் வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம். இந்த விஷயம்தான் இப்போது கோலிவுட்டின் ஹாட் கிசுகிசுவாக ஓடிக்கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X