Naren - LCU அப்டேட்.. கைதி 2வை விடுங்க.. லோகேஷ் கனகராஜின் புதிய சம்பவம் இதுவா?.. நரேன் சொன்ன அப்டேட்
சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக என்ன பிளான் வைத்திருக்கிறார் என்பது குறித்து நடிகர் நரேன் தெரிவித்திருக்கிறார்.
வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் களம் என்ற குறும்படத்தை இயக்கினார். அது கொடுத்த நம்பிக்கையின் காரணமாக தனது வேலையை உதறிவிட்டு முழு மூச்சாக சினிமாவில் இறங்கினார்.

அப்படி அவர் முதல் படமாக மாநகரம் படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ஹிட் இல்லையென்றாலும் டீசன்ட்டான வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அவரது மேக்கிங்கில் அனுபவம் வாய்ந்த இயக்குநர் எட்டிப்பார்த்தார்.
கைதியால் சிக்கிய லோகேஷ்: மாநகரம் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் கைதி படத்தை இயக்கினார். அந்தக் கதையை முதலில் மன்சூர் அலிகானுக்கு அவர் எழுதியதன் மூலமே அவர் தனது கதையின் மேல் எவ்வளவு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம். ஆனால் கைதி கதையை கேட்ட தயாரிப்பு நிறுவனம் பெரிய ஸ்டாரிடம் போகலாம் என கூற அதன் பிறகே கார்த்தி படத்துக்குள் வந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. இதனால் அவர் முன்னணி ஹீரோக்களின் பார்வையில் சிக்கினார்.
Pooja Hegde: பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டலா?.. அதிர்ச்சியான ரசிகர்கள்.. நடந்தது என்ன தெரியுமா?
விஜய்யுடன் லோகேஷ்: முதல் இரண்டு படங்களும் ஹிட் கொடுத்த பிறகு மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்தார் அதுவரை விஜய்யை யாரும் காண்பிக்காத வகையில் காண்பித்து படத்தின் வெற்றியை அறுவடை செய்தார் லோகேஷ். அதுமட்டுமின்றி ஹீரோவுக்கு ப்ளாஷ்பேக் இல்லாதது, ஹீரோவின் பெயரை விரிவாக கூறாதது என மேக்கிங்கில் வித்தியாசத்தை காண்பித்திருந்தார் அவர். அதனையடுத்து இயக்கிய விக்ரம் மெகா ஹிட்டானது.
அடுத்தடுத்த படங்கள்: அவரது இயக்கத்தில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. லியோ படத்தை முடித்திருக்கும் லோகேஷ் அடுத்து ரஜினியை வைத்து ஒரு படத்தையும், கைதி படத்தின் இரண்டாவது பாகத்தையும் இயக்க கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர ரோலக்ஸ், இரும்பு கை மாயாவி, விக்ரம் 2 ஆகிய படங்களையும் இயக்குகிறார்.
Rajini - ஷூட்டிங் ஸ்பாட்டில் சூப்பர் ஸ்டார் இப்படித்தான் இருப்பார்.. ரஜினி பற்றி செந்தில் பகிர்ந்த சுவாரஸ்யம்
எல்சியூ: லோகேஷின் ஸ்பெஷாலிட்டி அவர் உருவாக்கிய லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் எனப்படும் LCU. தனது ஸ்க்ரீன்ப்ளேவில் அதன் மூலம் மேஜிக் செய்த அவர் லியோ படத்தில் கொஞ்சம் சறுக்கினார். இந்நிலையில் எல்சியூ குறித்து கைதி படத்தில் நடித்த நரேன் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், “கைதி இரண்டாம் பாகத்துக்கு முன்பு ஒரு குறும்படம் வெளியாகும். அந்த ஷார்ட் ஃபிலிமை லோகேஷ் இயக்கியிருக்கிறார்.
எப்படி உருவானது: 10 நிமிடங்கள் ஓடும் அந்த குறும்படம் யூட்யூபிலோ அல்லது ஓடிடியிலோ வெளியாகும். அதில் நானும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதிலும் இந்தக் குறும்படத்தில் லோகேஷ் கனகராஜின் எல்சியூ எப்படி ஆரம்பித்தது என்பது கூறப்படும்” என்றார்.


Click it and Unblock the Notifications











