Dhanush - கேப்டன் மில்லர் படத்துக்கு தனுஷ் வாங்கிய சம்பளம் இவ்வளவா?.. ஆத்தாடி கிடுகிடுனு உயர்த்திட்டாரே

சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான வாத்தி படம் போதிய வரவேற்பை பெறவில்லை. நல்ல கதைக்களத்தை கொண்டிருந்தாலும் இயக்குநரின் மேக்கிங்கால் படம் படு சொதப்பலாக அமைந்தது. இதனால் தனுஷ் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த சூழலில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ்.

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான தனுஷ் கடைசியாக வாத்தி படத்தில் நடித்தார். திருச்சிற்றம்பலம் படம் கொடுத்த ஹிட் வைபை வாத்தி படத்தில் தவறவிட்டிருந்தார். குறிப்பாக இயக்குநர் தெலுங்கு இயக்குநர் என்பதால் அது தமிழ் படமா இல்லை தெலுங்கு படமா என்று கேள்வி எழும் அளவுக்கு இயக்கியிருந்தார். படம் படுதோல்வியை சந்தித்தது.

Here is the Details about Dhanush Salary in Captain Miller Movie


கேப்டன் மில்லர்: இதனையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க கமிட்டானார் தனுஷ். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க தனுஷுடன் ப்ரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய இரண்டு படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தற்போதைய இளம் இயக்குநர்களில் முக்கியமானவராக அருண் கவனம் ஈர்த்ததால் இப்படம் மீது தனுஷ் ரசிகர்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

என்ன கதை?: இந்தப் படத்தில் தனுஷ் போராளியாக நடித்திருக்கிறார். குறிப்பாக இப்படமானது ஈழ பிரச்னையை சுற்றி நடக்கும்படி திரைக்கதையை அருண் மாதேஸ்வரன் நகர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனி தமிழ் ஈழ விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்று ஒருவர் இருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது. அதனால் இப்படம் ஈழ பிரச்னையை பேசும் என திரைத்துறையில் ஒருதரப்பினர் கூறுகின்றனர்.

Vijayakanth - விஜயகாந்த் சமாதியில் பெர்ஃபார்மா பண்ணுறீங்க.. இந்தாங்க வாங்கிக்கங்க.. ப்ளூ சட்டை மாறன் விளாசல்

ஆடியோ லான்ச்: படமானது பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அருண் மாதேஸ்வரனுடன் முதன்முதலாக தனுஷ் இணைந்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படம் தரமான சம்பவம் செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்த சூழலில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

தனுஷின் நம்பிக்கை: விழாவில் பேசிய தனுஷ், கேப்டன் மில்லர் ஒரு சர்வதேச படமாக இருக்கும். புதிதான் முறையில் இந்தப் படத்தை அருண் ட்ரை செய்திருகிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார். அதேபோல் அருண் மாதேஸ்வரனும் இந்தப் படம் கண்டிப்பாக சிறந்த படமாக இருக்கும். ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

Ilayaraaja - இந்த உலகத்திலேயே நான் மட்டும்தான் செய்திருக்கிறேன்.. கர்வம் கிடையாது.. இளையராஜா ஓபன் டாக்

சம்பளம்: இந்த சூழலில் கேப்டன்மில்லர் படத்துக்காக தனுஷ் எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படத்துக்கு அவர் 20 கோடியிலிருந்து 25 கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஆச்சரியமடைந்திருக்கின்றனர். மேலும் கடைசியாக வெளியான வாத்தி படம் அவ்வளவு ஒன்றும் பெரிய ஹிட் இல்லை. இருந்தாலும் 25 கோடி ரூபாய்வரை தனுஷ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

கேப்டன் மில்லர் 2: இதற்கிடையே தனுஷும் அருண் மாதேஸ்வரனும் மீண்டும் இணைந்து பணியாற்றவிருக்கிறார்கள் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அந்தப் படம் அநேகமாக கேப்டன் மில்லர் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என பரவலான பேச்சு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X