Ajith - அஜித் படத்துக்கு கமல் ஹாசன் கொடுத்த ஐடியா.. அட செம மேட்டரா இருக்கே.. அதான் க்ளிக் ஆகிருக்கு
சென்னை: அஜித் கடைசியாக துணிவு படத்தில் நடித்தார். தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தற்போது குட்டி பிரேக் எடுத்திருக்கும் அவர் தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவழித்துவருகிறார். இந்த சூழலில் அஜித் படத்துக்கு கமல் ஹாசன் கொடுத்த ஐடியா பற்றி தெரியவந்திருக்கிறது.
துணிவு படத்தை அடுத்து தற்போது அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் அந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். மகிழ் திருமேனி இதுவரை இயக்கிய படங்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. எனவே முதன்முறையாக அவர் அஜித்துடன் கூட்டணி சேர்ந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது. மேலும் நிச்சயம் படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையையும் அஜித் ரசிகர்கள் கொண்டிருக்கின்றனர்.

விடாமுயற்சி நிலை: படத்திலிருந்து எந்த அஃபிஸியல் அப்டேட்டும் இதுவரை வரவில்லை. பெயர் அறிவிக்கப்பட்டதோடு சரி. இதனால் வலிமை அப்டேட்டுக்கு அஜித் ரசிகர்கள் எப்படி காத்திருந்தார்களோ. அதேபோல் இந்தப் படத்தின் அப்டேட்டுக்கும் காத்திருக்கின்றனர். அதிகாரப்பூர்வமாக எந்த அப்டேட்டும் வரவில்லை என்றாலும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்துவருகிறது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்துடன் அஜித்: படப்பிடிப்பில் அஜித்குமார் கலந்துகொண்டு மும்முரமாக நடித்தார். இதுவரை இரண்டு ஷெட்யூல்களில் அவர் கலந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. நிலைமை இப்படி இருக்க அவர் இப்போது ஒரு குட்டி பிரேக் எடுத்திருக்கிறார். தனது மகன் ஆத்விக் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அந்த பிரேக்கை அவர் எடுத்திருப்பதாக தெரிகிறது. அஜித் பிரேக் எடுத்தாலும் மகிழ் திருமேனி மற்ற போர்ஷன்களை விறுவிறுப்பாக ஷூட் செய்துவருகிறார். அநேகமாக இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கோ அல்லது தீபாவளிக்கோ படம் ரிலீஸாகலாம்.
Vijayakanth - நம்ம பணம்டா போயிட்டு வா.. கார் டிரைவரை ஹெலிகாப்டரில் ஏற்றி அழகு பார்த்த விஜயகாந்த்
சிட்டிசன்: இந்நிலையில் அஜித்குமார் நடித்த சிட்டிசன் படத்துக்கு கமல் ஹாசன் கொடுத்த ஐடியா பற்றி தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் சரவண சுப்பையா அளித்த பேட்டி ஒன்றில், “முகவரி படத்துக்கு பிறகுதான் அஜித்தின் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 15ஆவது நாளில் நடிக்க வந்த படம்தான் சிட்டிசன் திரைப்படம். அந்த சமயத்தில் தனது திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக கமல் ஹாசனை பார்க்க சென்றார்.
கமல் கொடுத்த ஐடியா: அஜித்தை கமல் ஹாசன் பார்த்ததும் சிட்டிசன் என்று சொல்லி அழைத்தார். அப்போது படம் குறித்து நிறைய விஷயங்களை இரண்டு பேரும் பேசியிருக்கிறார்கள். அந்த உரையாடலின்போது, ஹேராம் படத்தில் எனக்கு மேக்கப் போட்டவர்களை வேண்டுமானால் இந்தப் படத்துக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். அற்புதமாக பணியாற்றுகிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்.
நல்லா கம்பி கட்டுறீங்க.. விஜயகாந்துக்கு இதுவரை அஞ்சலி செலுத்த வராத நடிகர்கள்.. விளாசும் நெட்டிசன்ஸ்!
கமல் ஹாசன் அப்படி சொல்லும்வரை சிட்டிசன் படத்தில் அஜித்துக்கு மேக்கப் போடுவதற்கு; இந்தியன் படத்தில் மேக்கப் போட்டவர்களை பயன்படுத்தத்தான் திட்டமிட்டிருந்தோம். ஆனால் கமல் ஹாசனே இப்படி சொல்லிவிட்டதால் உடனடியாக ஹேராம் படத்துக்கு மேக்கப் போட்டவர்களை கமிட் செய்துவிட்டோம்” என்றார்.
அஜித் நடித்த படங்களில் சிட்டிசன் படம் முக்கியமானது. பல கெட்டப்புகளில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருப்பார் அவர். முக்கியமாக படத்தின் கதையும் சமூக அக்கறை கொண்டதாக இருக்கும். சிட்டிசன் படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியானது. இதில் அஜித், வசுந்துரா தாஸ், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. அஜித் இப்போது கமர்ஷியல் பாதையில் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் 2000களின் ஆரம்பத்தில் அவரது கதை தேர்வு வித்தியாசமாகவே இருந்தன. அந்த மாதிரியும் அவர் இப்போது நடிக்க வேண்டும் என்பது அஜித் ரசிகர்களிள் ஒரு தரப்பினருக்கு மிகப்பெரிய ஆசையாக இருப்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











