நடிகையிடம் செய்த சேட்டை?.. சிம்புவை விரட்டி விரட்டி அடித்தாரா டிஆர்?..பத்திரிகையாளர் கிளப்பிய பகீர்
சென்னை: நடிகர் சிம்பு தற்போது கமல் ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இரட்டை வேடங்களில் நடிக்கும் சிலம்பரசன் கண்டிப்பாக இந்தப் படத்தின் மூலம் மெகா ப்ளாக்பஸ்டரை கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்தச் சூழலில் சிம்பு மீண்டும் இயக்குநர் ஆகவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் சிம்பு குறித்து பத்திரிகையாளர் கோடங்கி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
எஸ்டிஆர், அட்மேன் என ரசிகர்களால் அழைக்கப்படும் சிம்பு சில காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பிறகு உடல் எடையை குறைத்து எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. சிம்புவின் நடிப்பும், வெங்கட் பிரபுவின் மேக்கிங்கும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போக படமானது நூறு கோடி ரூபாய் வசூலித்து கெத்து காட்டியது.

அடுத்தடுத்த ஹிட்: மாநாடு வெற்றிக்கு பிறகு சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் வெந்து தணிந்தது காடு படம் சூப்பர் ஹிட்டானது. அதில் சிம்புவின் நடிப்பு பெரிதளவு பேசப்பட்டது. அடுத்து நடித்த பத்து தல திரைப்படம் சரியாக போகவில்லை. சூழல் இப்படி இருக்க கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிலம்பரசன்.
எஸ்டிஆர் 48: இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. தேசிங்கு பெரியசாமி இயக்கம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எஸ்டிஆர் ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்துக்காக சிம்பு செம ஃபிட்னெஸ்ஸோடு இருக்கிறார். அதுமட்டுமின்றி மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளையும் அவர் கற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதற்காக அவர் தாய்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஷங்கர் மகள் திருமணத்தில் விஜய்யின் மகன்.. அப்பாவுக்கே டஃப் கொடுப்பாரு போலயே.. டிரெண்டாகும் போட்டோ!
படம் ட்ராப்?: படத்தின் அறிவிப்பு வெளியானதோடு அதற்கு பிறகு எந்தவிதமான மூவ்மெண்ட்டும் தெரியவில்லை. இதன் காரணமாக ஒருவேளை படத்தை ட்ராப் செய்துவிட்டார்களோ என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. அதற்கும் படக்குழு எந்த பதிலையும் அளிக்காமல் மௌனம் காத்துவந்தது. அதனையும் கவனித்த ரசிகர்கள், அவ்ளோதான் எஸ்டிஆர் 48 முடிந்துவிட்டதுபோல என்று உறுதியாகவே சமூகவலைதளங்களில் ஓபனாக பேச ஆரம்பித்தனர். ஆனால் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதற்கிடையே கமலுடன் தக் லைஃப் படத்திலும் நடிக்கிறார் சிம்பு.
கில்லி ரீ ரிலீஸ் வசூல் இத்தனை கோடியா?.. தீனா, பில்லா ரீ ரிலீஸ் வசூல் இவ்ளோதானா?.. பிஸ்மி ரிப்போர்ட்!
கோடங்கி பேட்டி: இந்நிலையில் சிம்பு குறித்து பத்திரிகையாளர் கோடங்கி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்தார். அப்போது பேசிய அவர், “கௌதமியை வைத்து டி.ராஜேந்தர் ஒரு படத்தை இயக்கினார். அதில் சிம்பு குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அந்த சமயத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு கௌதமியிடம் ஒரு சேட்டையை செய்துவிட்டார். அது என்ன சேட்டை என்று வெளியில் சொல்ல முடியாது. இது டி.ஆருக்கு பெரும் அவமானமாகிவிட்டது. பிறகு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை டி.ஆர் விரட்டி விரட்டி அடித்தார்.
அதன் பிறகு டி.ஆர் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது மனைவி உஷா, 'எப்படி எனது மகனை பப்ளிக்கில் அடிக்கலாம்’ என்று டி.ஆரை விரட்டி விரட்டி அடித்தார்” என்றார். அவரது இந்தப் பேட்டி சிம்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இதெல்லாம் சிம்புவின் நல்ல பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் அந்தப் பத்திரிகையாளர் சொல்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











