ஒரு வாரத்தில் லவ்.. 5 மாதங்களில் திருமணம்.. விஜய் சேதுபதியின் காதல் கதை தெரியுமா?..மனுஷன் செம ஸ்பீடு

சென்னை: சிறு சிறு கதாபாத்திரங்களில் தமிழ் சினிமாவில் தோன்றியவர் விஜய் சேதுபதி. பிறகு முட்டி மோதி ஹீரோவாகும் வாய்ப்புகளை பெற்ற அவர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார். அதன் காரணமாக டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக மாறினார். அவர் தற்போது மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக கத்ரீனா கைஃப் நடித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி கோலிவுட்டில் ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்தவர். புதுப்பேட்டை, நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றிக்கொண்டிருந்தார். அப்படிப்பட்டவருக்கு தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் சீனு ராமசாமி ஹீரோ வாய்ப்பை கொடுத்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. மேலும் தேசிய விருதையும் பெற்றது. இதன் காரணமாக விஜய் சேதுபதியும் அடையாளப்பட்டார். எனவே அவர் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றார்.

Vijay Sethupathi Shares his Love Story at Merry Christmas Promotion


தொடர்ந்து ஹிட்டுகள்: நாளைய இயக்குநர் செட் ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த நேரம் அது. அதன்படி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், பீட்சா, சூதுகவ்வும் என வரிசையாக ஹிட் படங்களில் நடித்தார் சேதுபதி. முக்கியமாக ஒவ்வொரு படத்துக்கும் தனது வெரைட்டியை காண்பித்ததால் இவருக்கு லக் மட்டுமில்லை திறமையும் இருக்கிறது என்பதை கோலிவுட் உணர்ந்துகொண்டது. இதனால் வேறு இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் விஜய் சேதுபதியை தொடர்ந்து படங்களில் புக் செய்தனர்.

ஹீரோ மட்டுமில்லை: ஹீரோவாக மட்டுமே நடித்துக்கொண்டிருந்த விஜய் சேதுபதி ஒருகட்டத்தில் ஸ்கோப் இருந்தால் வில்லனாகவும் நடிக்கலாம் என்று முடிவெடுத்து வில்லனாகவும் நடித்தார். அதன்படி மாஸ்டர், விக்ரம், பேட்ட போன்ற படங்களில் அவர் ஏற்றிருந்த வில்லன் கதாபாத்திரம் வரவேற்பை பெற்றது. அதேசமயம் அவர் வில்லனாக மட்டுமே நடிப்பதை அவரது ரசிகர்கள் விரும்பவில்லை. இதற்கிடையே அவர் ஹிந்தியிலும் எண்ட்ரி கொடுத்தார். அதன்படி ஃபர்ஸி வெப் சீரிஸில் நடித்த விஜய் சேதுபதி ஜவான் படத்தில் வில்லனாக நடித்தார்.

Bayilvan Ranganathan - மாஸ் ஹீரோவின் மனைவியை காதலித்தாரா ஜெய்?.. கொளுத்திப்போட்ட பயில்வான்.. பதறிப்போன நடிகர்

இனி ஹீரோதான்: ஃபர்ஸி மற்றும் ஜவானுக்கு முன்னதாகவே மெரி கிறிஸ்துமஸ் படத்தில் கமிட்டாகிவிட்டார். அதில் கத்ரீனா கைஃப் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருக்கும் இப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இனி வில்லன் கேரக்டரில் நடிக்கமாட்டேன் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டார் விஜய் சேதுபதி. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

காதல் கதை: இந்நிலையில் மெரி கிறிஸ்துமஸ் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே இருப்பதன் காரணமாக படத்தின் ப்ரோமோஷன் பணிகள் படு சூடாக நடந்துவருகிறது. அந்தவகையில் மும்பையில் ப்ரோமோஷனுக்காக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் விஜய் சேதுபதி. அவரிடம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர், 'நீங்கள் மிகப்பெரிய நட்சத்திரம். இருந்தாலும் மெரி கிறிஸிதுமஸ் போன்ற மாறுபட்ட படங்களில் நடிப்பதற்கு எப்படி தைரியமாக முடிவு எடுத்தீர்கள்’ என்ற கேள்வியை முன்வைத்தார்.

ரூ.225 சம்பளம் வாங்கிய..ஐஸ்வர்யா ராஜேஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

காதல் கதை: அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “நான் துபாயில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது இப்போது எனது மனைவியாக இருப்பவரை காதலித்தேன். அப்போது யாஹூ சாட் மட்டும்தான் இருந்தது. அவரிடம் அதன் வழியாகத்தான் பேசுவேன். அப்படி பேசிய ஒரே வாரத்தில் அவரிடம் எனது காதலை நான் சொல்லிவிட்டேன். ஐ லவ் யூ என்று சொல்லி உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்றேன். அதனையடுத்து 5 மாதங்கள்தான் காதலித்தேன். பிறகு ஊருக்கு வந்து அவரை திருமணம் செய்துகொண்டேன். எனது வாழ்வில் நான் எடுத்த மிக தைரியமான முடிவு அது. அதனுடன் ஒப்பிடும்போது படம் குறித்து முடிவு எடுப்பது எனக்கு ஒரு விஷயமே இல்லை” என்றார்.

சாட்டையடி பதில்: முன்னதாக சென்னையில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது பத்திரிகையாளர் ஒருவர் இந்தி குறித்து விவகாரமான ஒரு கேள்வியை விஜய் சேதுபதியிடம் முன்வைத்தார். அதற்கு அவர், “இந்தியை யாரும் படிக்கக்கூடாது என்று இங்கு சொல்லவில்லை. திணிக்கக்கூடாது என்றுதான்” என்றுதான் சொல்கிறோம் என கொடுத்திருந்த சாட்டையடி பதில் இணையத்தில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது. இப்படி விஜய் சேதுபதி தனது பதிலில் அடுத்தவரை அசரடிப்பதில் வல்லவர் என்பதும் கவனிக்கத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X