Vijay - படையப்பா படத்தில் நடிக்க சான்ஸ் கேட்ட விஜய்.. ட்ரெண்டாகும் பழைய வீடியோ

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான படம் படையப்பா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய அந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இன்றுவரை ரஜினிகாந்த்தின் தி பெஸ்ட் படங்களில் ஒன்றாக ஜொலித்துக்கொண்டிருக்கிறது படையப்பா. இந்தச் சூழலில் அதுதொடர்பாக விஜய் பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் படையப்பா. அவருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, நாசர், மணிவண்ணன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படம் 90ஸ் கிட்ஸின் பேவரைட்டாக இன்றுவரை திகழ்கிறது. இப்போது டிவியில் போட்டாலும் பலரும் தங்களது வேலைகளை விட்டுவிட்டு அமர்ந்து பார்க்கக்கூடிய திரைப்படமாக ஜொலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Talks about Padaiyappa Movie Video Goes Trending on Social Media


மெகா ஹிட் படையப்பா: படையப்பா திரைப்படம் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியானது. அதுவரை ரஜினிகாந்த் பல படங்களை மெகா ஹிட்டாக கொடுத்திருக்கிறார். ஆனால் படையப்பா படம் அதையெல்லாம் தாண்டிய ஹிட்டாக அமைந்தது. ரஜினியின் ஸ்டைல், ரம்யா கிருஷ்ணனின் மிரட்டலான நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, கே.எஸ்.ரவிக்குமாரின் மேக்கிங் என படையப்பா திரைப்படம் முழுக்க முழுக்க பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக அமைந்தது. இன்றுவரை பலரது மொபைல்களில் படையப்பா படம் டவுன்லோட் லிஸ்ட்டில் இருக்கிறது.

ரஜினி ஐடியா; நிராகரித்த கமல்: படையப்பா படத்தை முழுவதுமாக படமாக்கி முடித்துவிட்டு பார்க்கும்போது அதன் ரன்னிங் டைம் மொத்தம் நான்கு மணி நேரமாக இருந்ததாம். இதனால் என்ன செய்வதென்று தெரியாத ரஜினிபடத்துக்கு மொத்தம் இரண்டு இடைவேளைகள் விடலாம் என முடிவெடுத்தார்களாம். ஆனால் இதை கேள்விப்பட்ட கமல் ஹாசன் இரண்டு இடைவேளைகள் விடுவதெல்லாம் ஒத்துவராத விஷயம். எனவே படத்தின் நீளத்தை குறைத்து வெளியிடுங்கள் என ஐடியா கூறினார்.

SSMB 29: மகேஷ் பாபு, ராஜமெளலி கூட்டணியில் துல்கர் சல்மான்..? SSMB 29-ல் இணையும் பான் இந்தியா ஹீரோஸ்

சிவாஜிக்கு ஒருகோடி சம்பளம்: அதேபோல் சிவாஜி கணேசன் படையப்பா படத்தில் நடிக்கும்வரை அதிகபட்ச சம்பளமாக 20 லட்சம் ரூபாயைத்தான் பெற்றிருக்கிறார். எனவே படையப்பா படத்துக்கும் லட்சங்களில்தான் சம்பளம் கிடைக்கும் என நினைத்திருந்த சிவாஜிக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு கோடி ரூபாயை சம்பளமாக தர சொன்னது ரஜினிகாந்த் என்பதும், அதுதான் சிவாஜி கணேசன் முதலும் கடைசியுமாக ஒரு கோடி சம்பளம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறப்புகள்: இப்படி பல சிறப்புகள் படையப்பா படத்துக்கு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் படத்தில் இடம்பெற்ற சீன்கள். ரஜினிக்கு ஒவ்வொரு சீனும் அவ்வளவு மாஸாக இருந்தாலும் ஊஞ்சலை தனது சால்வையால் இழுத்து கீழே இறக்கும் காட்சி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பேசப்படும். அந்த அளவுக்கு அந்த சீனில் ரஜினியின் ஸ்டைல் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கும்.

Lal Salaam - எந்த ஓடிடியில் லால் சலாம் ரிலீஸ் தெரியுமா?.. வெளியான சூப்பர் தகவல்.. ரசிகர்கள் உற்சாகம்

விஜய் கேட்ட சான்ஸ்: இப்படி பல சிறப்புகளை பெற்றிருக்கும் படையப்பா படம் பற்றி விஜய் பேசிய பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர், “படையப்பா படத்தில் நடிப்பதற்காக யாரும் என்னை கூப்பிடவில்லை. நானேதான் ரஜினி சாருடன் நடிக்க வேண்டும் எனக்கு ஒரு சின்ன சான்ஸ் இருந்தால் கொடுங்கள் என்று கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டேன். ஆனால் கிடைக்கவில்லை” என்று பேசியிருந்தார். ரஜினியின் தீவிர ரசிகர் விஜய் என்பது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X