விஜய் ஃபீவர்.. மாயாஜாலில் அதிகரித்த ஜன நாயகன் ஷோஸ்.. பிவிஆர் எல்லாம் ஓபனான உடனே ஹவுஸ்ஃபுல்!

சென்னை: சினிமாவை விட்டு அரசியலுக்குப் போகிறேன் என சொன்னதுமே ரசிகர்கள் ரொம்பவே வருத்தமடைந்தனர். ஆனால், அரசியலில் களமிறங்கியதுமே தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்கள் விஜய்யை தூக்கி நிறுத்திய நிலையில், இனிமேல் விஜய்யை திரையில் பார்க்க மாட்டோமா என ஏங்கிய ரசிகர்கள் எல்லாம் தினமும் நேரிலேயே பார்க்கலாம் என்பதை புரிந்துக் கொண்டு ஜன நாயகன் ரிலீஸ் ஆனால் என்ன? ஆகவில்லை என்றால் என்ன? என்கிற அளவுக்கு மனம் மாறிவிட்டனர்.

அப்படிப்பட்ட மக்களுக்கு எப்படியாவது ஜன நாயகன் படத்தை தியேட்டரில் பார்க்க வழி வகை செய்து விட வேண்டும் என 'ஏ' சான்றிதழ் கொடுத்தாலும் பரவாயில்லை என பல மாதங்கள் போராடி சென்சார் சான்றிதழ் வாங்கி படத்தை ஜூலை 23ம் தேதி (நாளை) வெளியிடுகின்றனர்.

Vijay Wave Mayajaal increases shows for Jana Nayagan and PVR Multiplexes gone Housefull

கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் பல கோடி நஷ்டத்தை சந்தித்தாலும், விஜய்க்காக கடைசி வரை துணை நின்ற நிலையில், மக்கள் பதிலுக்கு நாங்களும் துணைக்கு நிற்போம் என லீக்கான ஜன நாயகன் படத்தை பார்க்க முண்டியடித்து வழக்கம் போல டிக்கெட் புக்கிங் ஓபன் பண்ண உடனே சர்வர்கள் கிராஷ் ஆகும் அளவுக்கு அடித்து நொறுக்கி வருகின்றனர்.

Also Read
லீக்கானாலும் விஜய்யோட மாஸ் குறையல.. இதுவரை ஜன நாயகன் ப்ரீ புக்கிங்கில் இத்தனை கோடியாம்!
லீக்கானாலும் விஜய்யோட மாஸ் குறையல.. இதுவரை ஜன நாயகன் ப்ரீ புக்கிங்கில் இத்தனை கோடியாம்!

40ல் இருந்து 65 ஷோக்களாக அதிகரித்த மாயாஜால்: புதிய படங்கள் வெளியானாலே அதுவும் ரஜினிகாந்த், விஜய், அஜித் படங்கள் என்றாலே மாயாஜால் சினிமாஸ் அனைத்து திரைகளிலும் நாள் முழுவதும் ஒரே படத்தை திரையிட்டு அத்தனை ஷோக்களையும் ஹவுஸ்ஃபுல் ஆக்குவது வழக்கம். ஜன நாயகன் படத்தை ஆரம்பத்தில் 40 ஷோக்களுக்கான புக்கிங்கை ஓபன் செய்த நிலையில், ரசிகர்கள் அதை ஹவுஸ்ஃபுல்லாக மாற்றிவிட்ட நிலையில், மற்ற படங்களை எல்லாம் நிறுத்தி விட்டு தற்போது 65 ஷோக்கள் முதல் நாளில் ஜன நாயகன் படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர். அதன் டிக்கெட்டுகளும் அதிரடியாக விற்றுத் தீர்ந்து வருகின்றன.

Recommended For You
கரூரில் ஜன நாயகன் படப்பிடிப்பு நடத்தப்பட்டதா? 41 பேர் பலிக்கு அது தான் காரணமா? எச்.வினோத் பேட்டி!
கரூரில் ஜன நாயகன் படப்பிடிப்பு நடத்தப்பட்டதா? 41 பேர் பலிக்கு அது தான் காரணமா? எச்.வினோத் பேட்டி!

பிவிஆர் எல்லாம் ஹவுஸ்ஃபுல்: சிங்கிள் தியேட்டர்கள் எல்லாம் டிக்கெட் விற்பனையை ஞாயிற்றுக்கிழமை முதல் ஓபன் செய்து ஹவுஸ்ஃபுல் ஆகி வந்த நிலையில், சற்றுமுன் பிவிஆர் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் டிக்கெட் புக்கிங்கை ஓபன் செய்ததும் வெயிட்டிங்கில் வெறியேறி காத்திருந்த விஜய் ரசிகர்கள் சர்வரை கிராஷ் செய்து விட்டனர்.

விஜய் போல யார் வருவா?: தமிழ் சினிமாவில் இப்படி ரசிகர்களை தியேட்டர்களை நோக்கி ரஜினிகாந்த், அஜித் குமார், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் முதல் நாளிலேயே அழைத்து வரும் நிலையில், ஜன நாயகன் படத்திற்கு பிறகு இனிமேல் விஜய் நடிக்க மாட்டார் என்பதால், இதற்கு மேல் புதுமுக நடிகர்களில் இப்படியொரு கூட்டத்தை தியேட்டர்களை நோக்கி அடுத்து அழைத்து வரப்போவது யாரு என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X