உன் லைஃப் மாறும்.. விஜய் சகோதரர் விக்ராந்த்துக்கு ரஜினிகாந்த் கொடுத்த நம்பிக்கை
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் உருவாகியிருக்கிறது. விக்ராந்த், விஷ்ணு விஷால், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியிருக்கின்றன. அந்தவகையில் நடிகர் விக்ராந்த் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்கியிருக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் லீடு ரோல்களில் நடித்திருக்கின்றனர். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இவர்கள் தவிர்த்து செந்தில், தன்யா உள்ளிட்டோரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவும் நடித்திருக்கிறார்கள். படமானது பிப்ரவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

லால் சலாம் ட்ரெய்லர்: லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. ட்ரெய்லர் படு மாஸாக வந்திருக்கிறது. முக்கியமாக ரஜினிகாந்த் வரும் இடம் எல்லாம் கூஸ் பம்ப்ஸாக இருக்கும் என்பதை படத்தின் ட்ரெய்லர் உறுதி செய்திருப்பதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்துவருகின்றனர். மேலும் கண்டிப்பாக இந்தப் படம் சுப்பர் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் கொண்டிருக்கின்றனர்.
ப்ரோமோஷன்: படம் ரிலீஸாக இன்னும் மூன்று நாட்களே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியிருக்கின்றன. அதன்படி படத்தில் நடித்திருக்கும் நடிகரும், விஜய்யின் சகோதரருமான விக்ராந்த் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “விஜய்யின் நெருங்கிய உறவினர் என்பதால் என்னிடம் கதை சொல்லும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பல நிபந்தனைகளை விதிப்பார்கள். வேறு ஒரு படத்தில் ஒரு காட்சியிலோ அல்லது ஒரு பாடலிலோ தோன்ற வேண்டும் என்று சொல்வார்கள். நான் யோசிக்காமல் முடியாது என்று சொல்லிவிடுவேன். அதனாலேயே பல வாய்ப்புகளை இழந்திருக்கிறேன்.
ரஜினி கொடுத்த நம்பிக்கை: லால் சலாம் படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் என்னை பார்த்து, நீங்கள் ரொம்ப நல்ல நடிகர். லால் சலாம் வெளியானதற்கு பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கை மாறிவிடும் என்று சொன்னார். இவ்வளவு பெரிய நடிகர் என்னை பார்த்து அப்படி சொன்னது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
GOAT - இந்த ஜோடி சூப்பரா இருக்கே.. மோகன் உடன் சினேகா.. என்னம்மா போஸ் கொடுத்து நிக்கிறாங்க!
தெரிந்துகொண்டது அதிகம்: இந்தப் படத்தின் மூலம் ரஜினிகாந்த்திடமிருந்து நான் தெரிந்துகொண்டது அதிகம். ஒவ்வொரு முறையும் அவரிடம் சென்று இந்தக் காட்சியை எப்படி நடித்தீர்கள். இதை எப்படி செய்தீர்கள் என நிறைய கேட்டிருக்கிறேன். அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை தனது தலையில் ஏற்றிக்கொண்டதே இல்லை. அவர் இன்னும் தன்னை பாலசந்தரின் மாணவராகத்தான் நினைத்துக்கொள்கிறார். ஒரு செட்டில் மூன்றாயிரம் பேர் இருந்தாலும் அனைவருடைய கண்களும் அவர் மீதுதான் இருக்கும்.
எல்லாம் நல்லா போய்ட்டு இருக்கு.. GOAT அப்டேட் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா
அமைதியாக இருப்பார்: ஆனால் அவர் அமைதியாக உட்கார்ந்து தீவிரமாக யோசித்துக்கொண்டேதான் இருப்பார். அப்படி என்னதான் யோசிக்கிறார் என்று நான் அவரிடம் ஒருமுறை கேட்டேன். ஒரு காட்சியில் பத்து நொடிகள்கூட வீணாக்கத்தான் விரும்பவில்லை. அதனால் அதை எப்படி சிறப்பாக நடிக்க வேண்டும் என்று யோசிப்பதாக அவர் கூறினார். நான் சொல்வதைத்தான் நடிக்க வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள். நீ என்ன புதிதாக செய்யப்போகிறாய் என்று பாலசந்தர் சொல்வார் என என்னிடம் கூறினார். பாலசந்தரின் இந்தக் குரலுக்காகத்தான் அவர் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறார். இந்த வயதிலும் அவர் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











