Trisha - விடாமுயற்சி படத்தில் திரிஷாவின் ரோல் இதுதான்.. வெளியான லேட்டஸ்ட் தகவல்

சென்னை: Trisha (திரிஷா) விடாமுயற்சி படத்தில் திரிஷாவுக்கு ஸ்டைலிஷும் ஆக்‌ஷனும் கலந்த ரோல் என புதிய தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு படம் சூப்பர் ஹிட்டடித்தது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அவர் தனது 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார். முதலில் அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது.

Here is the Details about Trishas Role in Vidaamuyarchi

ஆனால் அவர் படத்திலிருந்து வெளியேறியதால் அடுத்ததாக மகிழ் திருமேனி படத்தை இயக்குவதற்காக கமிட்டாகியிருக்கிறார்.

விடாமுயற்சி: படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து படம் பற்றிய எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. ஒருகட்டத்தில் இந்தப் படம் ட்ராப்பாகிவிட்டதோ என்ற சந்தேகமே ரசிகர்களிடம் வந்துவிட்டது.

அஜர்பைஜானில் ஷூட்டிங்: ஆனால் நல்வாய்ப்பாக அப்படி எதுவும் நடக்கவில்லை. அதிகாரப்பூர்வ அப்டேட் எதுவும் வராமல் இருந்தாலும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. இதில் திரிஷா, ரெஜினா, ப்ரியா பவானி சங்கர், சஞ்சய் தத், ஆரவ் உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது. முதல் ஷெட்யூல் ஷூட்டிங் அந்நாட்டில் விறுவிறுப்பாக நடந்தது.

ஹிப் ஹாப் கலைஞரால் மேடையில் அழுத சமந்தா.. என்ன காரணம் தெரியுமா?.. எல்லாம் அதனால் தான்

அஜர்பைஜான் போன அஜித்: படத்தின் ஒரு ஷெட்யூல் ஏற்கனவே அஜர்பைஜானில் முடிந்திருந்தது. அஜித்தும் அதனை முடித்துவிட்டு சென்னை வந்திருந்தார். இங்கு குட்டி ரெஸ்ட் எடுத்த அவர் சமீபத்தில்தான் அஜர்பைஜானுக்கு மீண்டும் கிளம்பி சென்றார். இந்த ஷெட்யூலில் மேலும் சில முக்கியமான காட்சிகளை எடுக்க மகிழ் திருமேனி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Kamal Haasan: மக்கள் நீதி மய்யத்தின் மானத்தை வாங்கிய சனம் ஷெட்டி.. கமல் தான் அப்படி கேட்டாரா?


திரிஷாவின் ரோல்: இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் திரிஷாவுக்கு என்ன மாதிரியான ரோல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவிவந்தது. தற்போது அதுகுறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படத்தில் திரிஷா படு ஸ்டைலிஷான கேரக்டரில் நடிக்கிறாராம். அதுமட்டுமின்றி ஏகப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளும் அவருக்கென்று இருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால் இதுவரை பார்க்காத திரிஷாவை இதில் பார்க்கலாம் என அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X