யஷ் மீது சாய்ந்து தம் அடிக்கும் நயன்தாரா.. பாத் டப்பில் நடிகையுடன் குளியல்.. டாக்ஸிக் ‘தடுமாறுதே’!

சென்னை: கேவிஎன் தயாரிப்பில் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் ஜூலை 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. ஜன நாயகன் படத்துக்கு கிடைத்தது போலவே கேவிஎன் தயாரிப்பில் யஷ் நடித்துள்ள டாக்ஸிக் படத்துக்கும் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அந்த படத்தின் 2வது பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

ஏற்கனவே முதல் பாடலான தபாஹி ரிலீஸ் ஆனதும் யஷ் மற்றும் கியாரா அத்வானி இருவரும் பண்ண அதீத கெமிஸ்ட்ரியை பார்த்த ரசிகர்கள் படு ஆபாசமாக பாடல் உள்ளதே என விமர்சனங்களை அடுக்கினர்.

Nayanthara smoking with Yash and Tara Sutaria Bath Tub scenes in Toxic Second Single
Photo Credit:

இந்நிலையில், அதைவிட எக்ஸ்ட்ரீம் ஹாட்னஸ் காட்சிகளுடன் நயன்தாரா சிகரெட் புகைக்கும் காட்சியுடன் வெளியாகி உள்ளது இந்த 'தடுமாறுதே' பாடல்.

Also Read
Hi Release Date: சூர்யாவோடு மோத முருகனை கூப்பிட்ட கவின்.. அரிவாளோடு ஹாய் சொல்லும் நயன்.. சம்பவம் உறுதி
Hi Release Date: சூர்யாவோடு மோத முருகனை கூப்பிட்ட கவின்.. அரிவாளோடு ஹாய் சொல்லும் நயன்.. சம்பவம் உறுதி

டாக்ஸிக் 2வது பாடல் ரிலீஸ்: கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹூமா குரேஷி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள டாக்ஸிக் திரைப்படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. பாலிவுட் படங்களை போல வீடியோ பாடலுடன் புரமோஷனை படக்குழு ஆரம்பித்துள்ளது. தபாஹி பாடலை தொடர்ந்து தற்போது தனிஷ்க் பாக்சி, அர்ஸ்லான் நிஜாமி மற்றும் ஃபஹீம் அப்துல்லா கூட்டணி இசையில் உருவாகியுள்ள 'தடுமாறுதே' பாடல் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் வரிகளில் சித்தார்த் பஸ்ரூர் இந்த பாடலை பாடியுள்ளார்.

Recommended For You
கியாரா அத்வானியோட புகுந்து விளையாடுறாரு யஷ்.. நயன்தாராவோட லுக் தான் செம.. டாக்ஸிக் பாட்டு செம!
கியாரா அத்வானியோட புகுந்து விளையாடுறாரு யஷ்.. நயன்தாராவோட லுக் தான் செம.. டாக்ஸிக் பாட்டு செம!

3 ஹீரோயின்கள்: தபாஹி பாடலில் கியாரா அத்வானியுடன் ரொமான்ஸ் செய்தாலும் தாரா சுதாரியா மற்றும் நயன்தாராவின் காட்சிகளும் அந்த பாடலில் இடம்பிடித்திருந்தன. இந்நிலையில், இந்த 'தடுமாறுதே' பாடலில் தாரா சுதாரியாவுடன் ரொமான்ஸ் செய்கிறார் யஷ். அதுவும் உங்க வூட்டு எங்க வூட்டு ரொமான்ஸ் அல்ல, ஆரம்பத்திலேயே பாத் டப்பில் நடிகையுடன் குளிப்பது முதல் கடைசியாக துப்பாக்கி எடுத்து தனது கேங் ஆட்களையே மிரட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தம்மடிக்கும் நயன்தாரா: யஷ்ஷின் அக்காவாக இந்த படத்தில் நயன்தாரா நடித்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வெளியான பாடலை பார்த்தால் நயன்தாராவும் ஒரு ஹீரோயினா என்றே எண்ணத் தோன்றுகிறது. யஷ் தோள் மீது சாய்ந்துக் கொண்டு சிகரெட் பிடிக்கும் காட்சி தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. டாக்ஸிக் படத்தில் வெறித்தனமாக பல சர்ச்சை விஷயங்களை இயக்குநர் கீது மோகன்தாஸ் குக் செய்திருப்பார் என்றே தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X