Hi Release Date: சூர்யாவோடு மோத முருகனை கூப்பிட்ட கவின்.. அரிவாளோடு ஹாய் சொல்லும் நயன்.. சம்பவம் உறுதி

சென்னை: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் பாக்ஸ் ஆபீஸ் வேட்டைகளில் ஒன்றாக ஆகஸ்ட் 14 ரிலீஸ் மாறி வருகிறது. சூர்யாவின் விஸ்வநாதன் & சன்ஸ் படம் வெளியாகும் அதே நாளில், நயன்தாரா - கவின் கூட்டணியில் உருவாகியுள்ள Hi :) படமும் களமிறங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோலிவுட்டில் தற்போது இந்த மோதல்தான் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே அதே தேதியில் லோகேஷ் கனகராஜ் மற்றும் வாமிகா கபி நடித்து உருவாகி உள்ள டிசி படமும் வெளியாவதாக படக்குழு அறிவித்திருந்தது.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கருப்பு படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அந்த வெற்றிக்குப் பிறகு வெளியாகும் விஸ்வநாதன் & சன்ஸ் மீது ரசிகர்கள் மட்டுமல்ல, திரையுலகிலும் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. குடும்ப சென்டிமென்ட், எமோஷன், கமர்ஷியல் அம்சங்கள் என அனைத்தும் கலந்த ஃபேமிலி என்டர்டெய்னராக படம் உருவாகியிருப்பதால், தென்னிந்திய பாக்ஸ் ஆபீஸில் பெரிய வசூலை குவிக்கும் என்ற பேச்சு ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கிறது.

Also Read
விஜய்யுடன் படம் செய்யுங்கள்.. ஹெச்.வினோத்துக்கு அட்வைஸ் செய்த அஜித்.. இப்படியும் நடந்திருக்கா?
விஜய்யுடன் படம் செய்யுங்கள்.. ஹெச்.வினோத்துக்கு அட்வைஸ் செய்த அஜித்.. இப்படியும் நடந்திருக்கா?
Suriya vs Kavin-Nayanthara on August 14 Kollywood Gears Up for a High-Stakes Box Office Clash

இந்த அறிவிப்பை மேலும் சுவாரஸ்யமாக்கியிருப்பது கவினின் பதிவு. படத்தின் ரிலீஸ் தேதி வீடியோவைப் பகிர்ந்த அவர், "மயிலேறும் முருகன் துணை" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ஒரு வரியே தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ஒரு பக்கம் முருகன் துணை என்று கவின் பதிவு செய்ய, மறுபக்கம் வீடியோவில் நயன்தாரா கையில் அரிவாளுடன் கூலாக ஹாய் சொல்லிக் கொண்டு நிற்கும் காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

எதிர்பார்ப்பு: அதே நேரத்தில் மழையில் நனைந்தபடி பைக்கில் வரும் கவினின் லுக்கும் படத்தின் மீது ஆர்வத்தை அதிகரித்துள்ளது. காதல் கதையாக தொடங்கும் படம், அதிரடி மற்றும் உணர்ச்சிகரமான திருப்பங்களையும் கொண்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் இந்த வீடியோ உருவாக்கியுள்ளது.

கரூரில் ஜன நாயகன் படப்பிடிப்பு நடத்தப்பட்டதா? 41 பேர் பலிக்கு அது தான் காரணமா? எச்.வினோத் பேட்டி!

கருப்பு வெற்றி: ஒரு பக்கம் கருப்பு வெற்றிக்குப் பிறகு சூர்யாவின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் நயன்தாரா - கவின் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம். இரண்டு படங்களும் வெவ்வேறு ஜானர்களைச் சேர்ந்ததாக இருந்தாலும், ஒரே நாளில் வெளியாக இருப்பதால் பாக்ஸ் ஆபீஸ் போட்டி தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

Suriya vs Kavin-Nayanthara on August 14 Kollywood Gears Up for a High-Stakes Box Office Clash

சரியான போட்டி: ஆகஸ்ட் 14-ம் தேதி சூர்யாவின் குடும்ப சென்டிமென்ட் கைகொடுக்குமா? அல்லது "மயிலேறும் முருகன் துணை" என களமிறங்கும் கவின் - நயன்தாரா கூட்டணி ரசிகர்களை தங்கள் பக்கம் இழுத்துவிடுமா? அல்லது ரத்தம் தெறிக்க தெறிக்க லோகேஷ் கனகராஜ் - வாமிகா கபியின் டிசி படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்குமா என்ற கேள்விதான் இப்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த நாளில் எந்த படம் முதல் நாளிலேயே வசூல் வேட்டையை தொடங்கப் போகிறது என்பதை ரசிகர்களும், திரையுலகமும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X