Sneha - பிரசன்னா சொன்ன ஒரு வார்த்தை.. கலங்கிப்போன நடிகை சினேகா.. ச்ச எவ்வளவு காதல் பாருங்க
சென்னை: நடிகை சினேகா தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கோவா படத்தில் நடித்தபோது பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டது. அதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இப்போதுவரை ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இந்த ஜோரி கோலிவுட்டின் ஃபேவைரைட் ஜோடிகளில் ஒன்று. இந்த சூழலில் பிரசன்னா சொன்ன ஒரு வார்த்தையால் சினேகா கலங்கிப்போனார்.
நடிகை சினேகா சுசி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் வெற்றி பெறாவிட்டாலும் சினேகாவின் நடிப்பும், அழகும் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம், கமல் ஹாசன், சிம்பு, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்தார்.

முன்னணி நடிகை: தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை சினேகா சரியாக பயன்படுத்திக்கொண்டார். நன்றாக தமிழ் பேச தெரிந்த நடிகை என்பதாலும் அவருக்கு கோலிவுட் சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்பு கொடுத்தது. தமிழில் எப்படி தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டாரோ அதேபோல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடிக்க செய்திருக்கிறார்.
புன்னகை அரசி: சினேகாவின் ப்ளஸ் பாயிண்ட்டாக ரசிகர்கள் பார்த்தது அவரது சிரிப்பை. அதன் காரணமாக அவரை புன்னகை அரசி என்றே ரசிகர்கள் அழைத்து வந்தனர். சினிமாவில் எப்படி பிஸியாக இருந்தாரோ அதேபோன்று விளம்பர படங்களிலும் பிஸியாகவே இருந்தார் சினேகா. அதன் காரணமாக சீரியல்களுக்கு இடையே வரும் விளம்பர இடைவேளைகளிலும் சினேகா அனைத்து வீடுகளுக்குள்ளும் சேர்ந்தார்.
Priyanka Mohan - பிரியங்கா மோகன் கிளாமர் காட்சிகளில் நடிப்பாரா?.. இதோ அவரே சொன்ன பதில்
திருமணம்: ஒருகட்டத்தில் சினேகாவுக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அப்போது நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடுவராக இருக்கிறார். மேலும் வெங்கட் பிரபு விஜய்யை வைத்து இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்க சினேகாவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அதற்கு அவர் ஒத்துக்கொண்டுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
கலங்கிப்போன சினேகா: இந்நிலையில் பிரசன்னாவும், சினேகாவும் ஒரு நடன நிகழ்ச்சியில் நடுவர்களாக இருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடிய இரண்டு பேர் வயதான கெட்டப்பில் ஆடினார்கள். அந்த நடனம் பக்காவாக இருந்தது. இதனை பார்த்த பிரசன்னா தன்னுடைய கருத்தை சொல்லும்போது, வயதான பிறகும் இதேபோன்றுதான் நான் சினேகாவுடன் இருக்க வேண்டும் என்றார். இதனை கேட்ட சினேகா ஆனந்த கண்ணீர் வடித்தார்.
Kanguva: GOAT ஸ்டைலில் கங்குவா அப்டேட்... விஜய் ரூட்டில் சூர்யா கொடுக்கும் சர்ப்ரைஸ் ட்ரீட்!
GOAT: சினேகா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார். அந்தவகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் Greatest Of All Time படத்தில் சினேகா என்ட்ரி கொடுத்திருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் ஹிட் அடிக்கும். எனவே சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என்ற எண்ணத்தில் சினேகா இருக்கிறார். படத்தின் ஷூட்டிங் இப்போது துருக்கியில் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சினேகாவுக்கு என்ன மாதிரியான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே இருக்கிறது. முன்னதாக விஜய்யுடன் அவர் ஏற்கனவே வசீகரா படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











