"நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்" - நடிகை தீப்ஷிகா ஓபன் டாக்!

சென்னை: பல உயிர்களைக் காக்கும் நாளைய மருத்துவ வல்லுநர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு நுழைவுத் தேர்வுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. ஆனால், அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படும் போதுதான் திறமைக்கு உண்மையான அங்கீகாரமும் மதிப்பும் கிடைக்க வேண்டும் என டோலிவுட் நடிகை தீப்ஷிகா சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான அளவுகோலாக நீட் தேர்வு தொடருமானால், அந்தத் தேர்வுக்கான முன் தயாரிப்பும் வாய்ப்புகளும் அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும். குறிப்பாக, அரசு மற்றும் கிராமப்புறப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தரமான நீட் பயிற்சியும் முறையான கல்வியும் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். முன்னாளில் நீட் தேர்வை எதிர்கொண்ட ஒரு மாணவி என்ற அடிப்படையில் நான் இதனை வலியுறுத்துகிறேன்.

Students deserve Justice accountability and a Level playing field in NEET - Deepshika Chandran

தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்குச் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். மேலும், தேர்வு முறையின் நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் வலுப்படுத்தும் வகையில் அவசியமான சீர்திருத்தங்கள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

Also Read
நீட் தேர்வுக்கு எதிரான பிரபலங்களின் குரல்.. CM விஜய்க்கு எதிரானதா? TN அரசியலுக்கு இப்படி ஒரு நிலையா?
நீட் தேர்வுக்கு எதிரான பிரபலங்களின் குரல்.. CM விஜய்க்கு எதிரானதா? TN அரசியலுக்கு இப்படி ஒரு நிலையா?

இது மாணவர்களால் முன்னெடுக்கப்படும் ஒரு தார்மீக இயக்கமாகவே தொடர வேண்டும். இதனைத் தங்களின் சுய அரசியல் நோக்கங்களுக்காகப் பிளவுபடுத்தக் கூடாது. இந்த இயக்கத்தின் மையப்புள்ளியாக மாணவர்களின் நலன், சமத்துவம், பொறுப்புக்கூறல் மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என தீப்ஷிகா குரல் கொடுத்துள்ளார். ரமணி கல்யாணம் படத்தில் நடித்து பிரபலமான தீப்ஷிகாவும் தைரியமாக நீட் பிரச்னைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.

Recommended For You
எங்கள் குரல் உங்கள் லத்தியை விட வலிமையானது.. டெல்லியில் வெடித்த நீட் போராட்டம்... அஞ்சலி ஆதரவு!
எங்கள் குரல் உங்கள் லத்தியை விட வலிமையானது.. டெல்லியில் வெடித்த நீட் போராட்டம்... அஞ்சலி ஆதரவு!

பிரதீப் ரங்கநாதன் தொடங்கி நாடு முழுவதும் பல பிரபலங்கள் நீட் தேர்வில் நடந்த முறைகேடுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு சப்போர்ட் செய்யத் தொடங்கியுள்ளனர். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா. ரஞ்சித், அமீர், தேவதர்ஷினி, ஆண்ட்ரியா, வெற்றிமாறன், தெருக்குரல் அறிவு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X