விஜய் சார் முதலமைச்சர் ஆக மாட்டாருன்னு ஏன் நினைச்சேன்.. எனக்கு நடந்த அநீதி.. எச். வினோத் ஓபன் டாக்!

சென்னை: ஜன நாயகன் திரைப்படம் ஜூலை 23ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சற்றுமுன் பிரஸ் மீட் நடத்தி பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு இயக்குநர் எச். வினோத் பதிலளித்துள்ளார். சில யூடியூப் சேனல்களுக்கு பிரத்யேகமாக பதிலளித்த எச். வினோத் ஜன நாயகன் லீக் தொடர்பாகவும், கரூர் சம்பவம் உள்ளிட்ட பல சிக்கலான கேள்விகளுக்கும் பதில் அளித்திருந்த நிலையில், மீண்டும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

முதலமைச்சரான பிறகும் விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுப்பது ஏன் என்கிற விவாதங்களும், விமர்சனங்களும் கிளம்பி வரும் சூழலில் ஜன நாயகன் இயக்குநர் எச். வினோத் பத்திரிகையாளர்களின் அனைத்து கேள்விகளுக்கும் தனது ஸ்டைலில் பதில் அளித்துள்ளார்.

H Vinoth opens up why he thinks Vijay will not turn as CM

கரூர் பிரச்சாரத்தின் போது ஷூட்டிங் நடத்துனீங்களா? என்கிற கேள்விக்கு அந்த பொய்யை பரப்பிய பத்திரிகையாளர் மீதும் அதை ஷேர் செய்தவர்கள் மீதும் எனக்கு கோபம் உள்ளது என்றும் வெளிப்படையாக கூறினார்.

Also Read
லீக்கானாலும் விஜய்யோட மாஸ் குறையல.. இதுவரை ஜன நாயகன் ப்ரீ புக்கிங்கில் இத்தனை கோடியாம்!
லீக்கானாலும் விஜய்யோட மாஸ் குறையல.. இதுவரை ஜன நாயகன் ப்ரீ புக்கிங்கில் இத்தனை கோடியாம்!

ஆலமரமாக நின்ற விஜய்: ஜன நாயகன் படத்துக்கு வந்த அனைத்து பிரச்னைகளையும் சமாளிக்கும் ஆலமரமாக விஜய் சாரும் தயாரிப்பாளர் கேவிஎன் சாரும் தான் இருந்தனர். படத்துக்கு முதலில் யு/ஏ கொடுத்தாங்க. அதன் பின்னர், சர்டிபிகேட் தராமல் ஸ்டாப் பண்ணாங்க. அதன் பின்னர் மொத்த படமும் லீக் ஆனது. கடைசியாக ஏ சான்றிதழ் கொடுத்தாங்க. இந்த எல்லா பிரச்னைக்கும் எனக்கு முழு சப்போர்ட் விஜய் சார் கொடுத்தார் என எச். வினோத் பதிலளித்துள்ளார்.

Recommended For You
ஜன நாயகன் லீக்கான பிறகு எவன் பார்ப்பான்.. ப்ளூ சட்டை பார்த்து இருப்பாரு.. VTV கணேஷ்!
ஜன நாயகன் லீக்கான பிறகு எவன் பார்ப்பான்.. ப்ளூ சட்டை பார்த்து இருப்பாரு.. VTV கணேஷ்!

முதலமைச்சர் ஆக மாட்டாருன்னு ஏன் நினைச்சேன்: விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தை இயக்கிய இயக்குநர் எச். வினோத் கூட கடைசி வரை முதலமைச்சராக விஜய் வரமாட்டார் என்றே நினைத்தேன் என சமீபத்திய பேட்டியில் பேசியது குறித்த கேள்விக்கு, இங்கு நடைபெறும் ஒவ்வொரு தேர்தலும் ஜாதிய அடிப்படையிலும், எந்த இடத்தில் யாருக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது, மணி ஃப்லோ எப்படி இருக்கு என்கிற கணக்குப் பார்த்து தான் நடக்கும். அதையெல்லாம் நினைத்து நானும் விஜய் சார் சிஎம் ஆக மாட்டார் என்று நினைத்தேன். ஆனால், ஓட்டுக்கு காசு வாங்கினார்களோ, இல்லையோ, காசுக்காக ஓட்டை விற்காமல் அனைத்து கணக்குகளையும் மக்கள் தவிடுபொடியாக்கி விஜய் சாரை முதலமைச்சராக மாற்றியுள்ளனர். இனி வரும் தேர்தல்களில் இந்த ஃபேக்டரும் எதிரொலிக்கும் என்பதே பெரிய விஷயம் என பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X