3 என்பது நடிகர் தனுஷ் நடிப்பில் 2012இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமகும். இத்திரைப்படமானது தெலுங்கு, இந்தி மொழிகளிலும் மொழி மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இப்படமானது தனுசின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவின் தயாரிப்பில் வெளிவந்தது. இதில் கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தனுஷுக்கு இணையாக நடிக்கிறார். இந்தப் படத்தின் ஒரு பாடல் 'வைய் திஸ் கொலவெறி டி' இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.