twitter

    ஆயிரத்தில் ஒருவன் கதை

    ஆயிரத்தில் ஒருவன் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி சிவக்குமார், ரீமா சென் ஆகியோர் முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் பார்த்திபன், ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோர் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை என்பனவும் இயக்குனரே ஏற்றுள்ளார். இத்திரைப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    கதை:

    கி.பி. 1279 இல் கதை தொடங்குகிறது. சோழர் ஆட்சியின் கடைசிக்கட்டம். பாண்டியர் சோழரோடு போரிட்டு, பாண்டியரின் குலதெய்வச் சிலையையும், ஒரு சோழ இளவரசனையும் வியட்னாம் அருகிலுள்ள ஓர் தீவுக்கு அனுப்பி வைத்தார்களாம். அதைத் தேடி செல்லும் தொல்பொருளாய்வாளர் அன்ரியாவின் அப்பா. சென்ற இடத்தில் காணாமல் போய்விடவே அங்கே அவரைத் தேடி செல்லும் குழுவில் இடம்பெறுகிறார்கள் ரீமாசென் மற்றும் அன்ரியா. மூட்டை தூக்குபவர் கார்த்தி. ஒரு வகையாக தீவை சென்றடைகிறார்கள். அங்கே தம் இளவரசனின் பாதுகாப்பைக் கருதி சோழர் செய்து வைத்துவிட்டுப் போன பொறிகள் இவர்கள் பயணத்தை கடினமாகவும், ஆபத்து மிக்கதாகவும் ஆக்குகிறது. பழங்குடியினர், காவல் வீரர்கள், பாம்புகள், மணலுள் மறைந்திருக்கும் பொறிக்கதவுகள் என பொறிகள் ஏராளம். இவைகளை தாண்டி உள்ளே சென்றவர்கள் கார்த்திக், ரீமா, அன்ட்ரியா மேலும் சிலரே. இதில் முதல் மூவரும், குழுவை விட்டு தொலைவில் வந்து சோழர்களின் சிதையுண்ட நகரைக் காண்கிறனர்.

    பின்னர் சோழரையும் காண்கிறனர். அடியோடு அழிந்து விட்டதாக கருதப்பட்ட சோழர் வந்த இடத்தில் நகரமைத்து வாழ்ந்திருப்பதாக காட்டப்படுகிறது. ஆயினும் முன்னிருந்த செல்வ வளம் குன்றி, பண்பாட்டுக் கூறுகளை பெரும்பாலும் இழந்தவர்களாகவே காட்டப்படுகிறனர். தற்கால தமிழ் புரியாமையால், அவர்கள் மூவரையும் கொல்லும் தறுவாயில் ரீமாசென் பேச தொடங்குகிறார். பாண்டிய அரச குடும்பத்தின் எச்சங்களே ரீமாசென், அவருடன் வந்த இராணுவ அதிகாரி, ஒரு அமைச்சர் உள்ளிட்ட எண்வர் கொண்ட குழு. தம் குலதெய்வ சிலையை மீட்க வந்த அவர், சோழரை பூண்டோடு அழிக்க மனத்தில் சூளுரை எடுத்துக் கொள்கிறார். தன்னை சோழனை மணம் முடித்து, தாய்த்தேசம் அழைத்துவரும்படி சொன்னதாக பொய் சொல்கிறார்.

    சிறுவயதிலிருந்தே அவர் பெற்றோர் பாண்டியராகவே வளர்த்தமையும், தம் குலதெய்வ சிலையை மீட்க வேண்டியது இன்றியமையாததென்பதையும் வளர்த்தமையையும் நினைவுகூர்கிறார். இதனாலேயே, ரீமாவால், சோழர் தமிழ் பேச முடிந்தது. சிறைக்கைதிகளுக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் கார்த்திக் சோழன் மதிப்பை பெறுகிறார். பின் ரீமாசென் கெட்டவள் என்றறியும் போது காலம் கடந்துவிட்டது. இதுகாலும், சோழர் ஒரு தூதுவன் வந்து தம்மை மீட்பான் என முன்னோர் சுவரில் தீட்டி வைத்திருந்த சித்திரத்தில் இருந்தே தெரிந்து கொண்டனர்.

    அதில் உள்ளது போலவே, கார்த்திக் வந்து இளவரசனை தூக்கும் போது, மாரி பொழிகிறது. சோழருக்கெதிராக படை தொடுக்கிறனர். கவண் முதலிய பழைய உத்திகளை கையாளும் சோழர் படை, ரீமாசென் தண்ணீரில் கலந்துவிட்டுச் சென்ற மருந்தால் படைவீரர் விழவும், புது ஆயுதங்களுக்கு தாக்குபிடிக்காமையானும் சிறைபிடிக்கப்படுகின்றனர். ஓவியத்தில் காட்டப்பட்டது போலவே கார்த்திக் சோழ இளவரசனுடன் விரைகிறார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie ஆயிரத்தில் ஒருவன் with us? Please send it to us ([email protected]).