ஏஸ் காதல் குற்ற நகைச்சுவை திரைப்படம், இதை 7Cs என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முன்னணி வேடத்தில் நடித்துள்ளார், அவருடன் ருக்மிணி வசந்த் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசையை ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் கரண் பி. ராவத் மற்றும் எடிட்டிங் ஆர். கோவிந்தராஜ்.
கதை
வெளிநாட்டுக்கு ஒரு நல்ல வேலையில் சென்று, புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பதே கண்ணனின் கனவு.ஆனால் எதிர்பாராத விதமாக கண்ணன் ஒரு கொள்ளைக்கார கும்பளிடம் சிக்கிக் கொள்கின்றான். இப்போது, வஞ்சனைகளும் அபாயங்களும் நிரம்பிய ஒரு சூழ்நிலையில், தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி கண்ணன் தப்பிக்க வேண்டும்.
வெளியீடு
ஏஸ் திரைப்படம் மே 23, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.