அலாதின் கதை

  அலாதின் இயக்குனர் கய் ரிட்சி இயக்கத்தில் வில் ஸ்மித், மின மாஸ்சவுட் நடித்துள்ள அதிரடியான பிரமாண்ட திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அலன் மென்கென் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் அலன் ஸ்டீவர்ட் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தினை வால்ட் டிஸ்னி பிக்சரஸ் நிறுவனம் சார்பில் டேன் லின் தயாரித்துள்ளார்.

  அலாதின் ஒரு நாட்டுப்புற கதையாகும், இது ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகள் என்ற பெருங்கதையின் ஒரு கதையாகும். இக்கதையினை பல நாடுகளில் பல மொழிகளில் திரைப்படமாகவும், தொலைக்காட்சி தொடராகவும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகள் என்பது ஷாரியர் என்னும் மன்னனுக்கு மந்திரியின் மகன் ஷாரஜாத் ஆயிரத்தோரு இரவுகளில் கூறிய அரபுக் கதைகள் என்பதாகும்.

  இக்கதையினை தமிழில் அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற தலைப்பில் கமல்ஹாசன் கதாநாயகனாக ரஜினிகாந்த் உடன் நடித்திருந்தார். இக்கதையின் மூலம் தந்திரம், சாகசம், புத்தி கூர்மை, விடாமுயற்சி, அஞ்சாமை, வீர தீரம் ஆகிய உணர்வுகள் கூறப்படுகின்றன. இக்கதையினை பல்வேறு வடிவங்களில் அவரவர் இடங்களுக்கேற்ப ஒருசில மாற்றங்களுடன் பல வகைகளில் கூறப்படுகிறது.

  கதை
  ஒரு மந்திரவாதி, ஒரு குகையில் இருக்கும் மந்திர விளக்கை அடைய முயல்கிறான். தூய எண்ணங்களை கொண்ட ஒருவனே அதனை அடைய முடியும் என்று அறிந்த மந்திரவாதி அலாவுதீனின் சித்தப்பா வேடம் அணிந்து ஆசை வார்த்தைகள் பேசி அலாவுதீனை அனுப்புகிறார். அலாவுதீனின் பாதுகாப்பிற்கு பூதத்தை உள்ளடக்கிய மந்திர மோதிரம் ஒன்றினை தருகிறார், குகைக்குள் விளக்கை எடுக்கும் அலாவுதீன், அதன் சக்தி கொண்டு செல்வந்தனாக மாறுகிறான். அந்த நாட்டு இளவரசியை திருமணம் புரிகிறார். பின்னர் அந்த மந்திரவாதி அந்த விளக்கை பெற்று பழி தீர்க்க வருகிறார், இறுதியில் அந்த விளக்கினை காப்பாற்ற நடக்கும் போரானது படத்தின் கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie அலாதின் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).