twitter

    அன்னபேல் கம்ஸ் ஹோம் கதை

    அன்னபேல் கம்ஸ் ஹோம் இயக்குனர் கேரி டயூபெர்மேன் இயக்கத்தில் மெக்கெனா க்ராஸ், மேடிசன் இஸ்மேன், பேட்ரிக் வில்சன் நடிக்கும் திகழ் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளரும் ஹாலிவுட் திரைப்பட இயக்குனருமான ஜேம்ஸ் வான் தயாரிப்பில், ஒளிப்பதிவாளர் மிக்கேல் பூர்ஜ்ஸ் மாற்றும் படத்தொகுப்பாளர் கிர்க் மோரி திரைப்பணியில் இசையமைப்பாளர் ஜோசப் பிஷார இசையமைத்துள்ளார்.

    அன்னபேல்

    அமெரிக்கா நாட்டின் திகழ் திரைப்படங்களின் வரிசையில் உருவான பிரபலமான திரைப்படம். இத்திரைப்படமானது 2013-ம் ஆண்டு வெளிவந்து உலகளவில் பிரபலமான திகில் திரைப்படமான கான்ஜுரிங் திரைப்படத்தின் இயக்குனரான ஜேம்ஸ் வான் தயாரிப்பில், 2014-ம் ஆண்டு இயக்குனர் ஜான்.ஆர் என்பவரால் இயக்கப்பட்டு உலகம் முழுவதும் வெளியாகி பிரபலமான திரைப்படமாகும்.

    இத்திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு உலகளவில் வரவேற்புகள் கிடைத்துள்ளது. மேலும் அன்னபெல் 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் கதையாசிரியரான கேரி டயூபெர்மேன், தற்போது 2019-ம் ஆண்டு வெளியாகும் அன்னபெல் இரண்டாம் பாகத்திற்கு இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

    கதை

    தீய சக்தி வாய்ந்த அன்னபேல் பொம்மையினை கட்டுப்படுத்தி தன் வீட்டில் உள்ள இரகசிய அரை ஒன்றில் பாதுகாப்பாக ஒரு கண்ணாடி பெட்டகத்திற்குள் அதனை அடைத்து வைக்கின்றனர் ஒரு தம்பதியினர்.

    அந்த வீட்டில் 10 வயது சிறுமியுடன் கணவன் மனைவி வாழ்ந்து வருகிறார். இவர்கள் இல்லாத நேரங்களில் இந்த குழந்தையை பார்த்துக்கொள்ள இளம்பெண் ஒருவர் அந்த வீட்டிற்குள் வேளைக்கு வருகிறார்.

    அந்த வீட்டை பற்றியும், இந்த தம்பதியை பற்றியும் அந்த நகரத்தில் பலரும் அறிந்துள்ளனர். இந்த வீட்டில் வேளைக்கு வரும் பணிப்பெண் அந்த குழந்தையின் உதவியோடு அந்த இரகசிய அறைக்குள் சென்றுவருகிறார். பின்னர் அந்த குழந்தைக்கு தெரியாமல் இரகசிய அறைக்குள் சென்ற பணிப்பெண் விபரீதம் அறியாமல் அந்த கண்ணாடி பெட்டகத்திற்குள் உள்ள பொம்மையினை வெளியில் எடுக்கிறார்.

    அக்கணம் முதல் திரைப்படத்தில் திகில் சம்பவங்கள் தொடர்கிறது. பின்னர் குழந்தையின் பெற்றோர்கள் வீட்டிற்கு வந்ததும் அதனை கட்டுப்படுத்த முயற்சி செய்வதே படத்தின் திரைக்கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie அன்னபேல் கம்ஸ் ஹோம் with us? Please send it to us ([email protected]).