அந்நியன் கதை

  அந்நியன், 2005-ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், சதா, விவேக், பிரகாஷ் ராஜ் மற்றும் பலரும் நடித்த நகைச்சுவை, காதல் மற்றும் அதிரடி த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் வி. ரவிச்சந்திரன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

  அதிரடி மற்றும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் மற்றும் மணிகண்டன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் விஜயன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை திருமதி. சுஜாத்தா எழுதியுள்ளார்.

  இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆஸ்க்கார் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து விநியோகம் செய்துள்ளது.

  அந்நியன் திரைப்படத்தின் கதை

  ஓர் அப்பாவி வழக்கலைஞரான அம்பி (இராமானுஜம் ஐயங்கார்) நேர்மையான வழக்கலைஞர். இவர் சமூகத்தில் அன்றாட மக்கள் எதிர்கொள்ளும் சட்டத்திற்கு புறமான நடவெடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்து போராடுபவர். இதனால் அனைவரும் இவரை இகழ்ந்து கேலி, கிண்டகள் செய்து "ரூல்ஸ் ராமானுஜம்" என அழைத்து வருகின்றனர்.

  இவரது தொடர்ச்சியான நேர்மை, நியாயம் போன்ற கொள்ளைகள் மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இவருக்குள் "அந்நியன்" என்னும் ஒரு ஆக்ரோசமான குணாதியசம் கொண்டுள்ள பிரமை ஒன்று உருவாகிறது. இவரால் சமாளிக்க முடியாத நேரங்களில் அந்த அந்நியன் இவருக்குள் இருந்து வெளிவந்து போராடுகிறார்.

  சமுதாயத்தில் பணபலம் மற்றும் அதிகார பலத்தினால் தவறுகளை செய்து வரும் சில குற்றவாளிகளை அந்நியனாக மாறி கருட புராணத்தின் படி தண்டனைகளை அளித்து வருகிறார், அம்பி. இதனை காவற்துறை அதிகாரியான பிரகாஷ்ராஜ் மற்றும் சாரி (விவேக்) கொலைகளைப் பற்றிப் புலனாய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

  அம்பி ஒருதலையாக நந்தினியை (சதா) விரும்புகின்றார். எனினும் ஒரே சட்டம் சட்டம் என்று பேசும் அம்பியின் மனதளவில் வெறுக்கும் சதா, இவரை பிடிக்கவில்லை என அவுமானப்படுத்த, இவருக்குள் மீண்டும் ரெமோ என்னும் ஒரு புதிய குணம் தோன்றுகிறது.

  ஒரு மிக பெரிய தொகைக்கு சட்டத்திற்கு புறம்பாக தனது நிலத்தை விற்கும் நந்தினி , அரசாங்கத்திற்கு வரிகட்டாமல் விற்கிறார். இதனை அறிந்த அம்பி சதாவை தடுக்க, அம்பியின் புலம்பலை பொருட்படுத்தாமல் சதா நிலத்தினை விற்கிறார். ரெமோவிடம் இந்த செய்தியை கூற, ரெமோவாக உள்ள அம்பி அந்நியனாக மாறுகிறார். பின் அவரிடம் இருந்து தப்பிக்கும் சதா, அம்பியை வைதியசாலையில் மருத்துவச் சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுகிறார்.

  அங்கு மருத்துவராக வரும் நாசர் அம்பியின் குறைபாட்டை பற்றி சதாவிடம் எடுத்துரைக்கிறார். பின்னர் என்ன நடந்தது என்பதே இப்படத்தின் கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie அந்நியன் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).