ஆரம்பம் நவம்பர் 2013ல் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம். ஏ. எம். ரத்னம், ஏ. ரகுராம் ஆகியோர் தயாரிக்க விஷ்ணுவர்த்தன் இயக்கும் இத்திரைப்படத்தில் அஜித் குமார், ஆர்யா, நயன்தாரா, டாப்சி பன்னு போன்றோர் முன்னணி வேடங்களில் நடித்தனர். இப்படம் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் திரையிடப்பட்டது. அதாவது 2013 ஆம் ஆண்டின் தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக வெளியானது.
இத்திரைப்படம், தமிழ்ப் பதிப்பில் மட்டும் சுமார் 235 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகத் தயாரிப்பாளர் ஸ்ரீனு பாபு பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.