அசுரவதம் இயக்குனர் மருதுபாண்டியன் இயக்கத்தில் சசிக்குமார், நந்திதா நடித்த அதிரடி காதல் திரைப்படம்.
கதை :
படத்தின் முதல் காட்சியிலேயே வில்லன் சமயனுக்கு (வசுமித்ரா) அவரது மாமனாரிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வருகிறது. தனது மகளை அழைத்து செல்லும்படி மிரட்டுகிறார் மாமனார். அதைத்தொடர்ந்து ஒரு மர்ம நம்பரில் இருந்து பல அழைப்புகள் வருகிறது. ஆனால் அவர் போனை எடுக்கும் முன்பே, அழைப்பு துண்டிக்கப்படுகிறது. இறுதியில் போனில் பேசும் மர்ம நபர், இன்னும் ஒருவாரத்தில் சமயனை கொல்லப்போவதாக மிரட்டல் விடுகிறார். அடுத்தடுத்த காட்சிகளில் போனில் மிரட்டியது சசிகுமார் என தெரிய வருகிறது.
சசிகுமார் பின்தொடர்ந்துகொண்டே இருப்பதால், வில்லன் சமயனுக்கு பயம் தொற்றிக் கொள்கிறது. அவரது நண்பர்களான நமோ நாராயணா, ராஜசிம்மன், ஸ்ரீஜித் ரவி உள்ளிட்டோரை துணைக்கு அழைக்கிறார். ஆனால் சசிகுமாரின் வேகத்துக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. பல்வேறு விதிமாக வில்லனை சித்ரவதை செய்கிறார் சசிகுமார். இதனால் சோர்ந்து போகும் வில்லன் சமயன், சசிகுமார் யார்? தன்னை ஏன் கொல்ல நினைக்கிறார் என்பது புரியாமல் தவிக்கிறார். இந்த கேள்விக்கு விடை தேடி பயணிக்கிறது மீதிக்கதை.