அவதார்: தி வே ஆப் வாட்டர் கதை

  அவதார்: தி வே ஆப் வாட்டர் (அவதார் 2) - இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சாம் வோர்த்திங்டன், ஜோ சல்டனா, சிகர்னி வேவர், இசுடீபன் லாங் என பலர் நடித்திருக்கும் காவிய & அறிபுனை முறையில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்.  இத்திரைப்படம் 2009-ம் ஆண்டு ஆண்டு உலகளவில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்றுள்ள 'அவதார்' திரைப்படத்தின் தொடர்ச்சி ஆகும்.

  இப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் மற்றும்  ஜான் இலாண்டாவ் என்பவரும் இணைந்து அவதார் 2 படத்தினை தயாரித்துள்ளனர். நவீன தொழில்நுட்பம் உதவியோடு பிரமாண்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரசல் கார்பெண்டர் ஒளிப்பதிவில், டேவிட் பிரென்னர் & ஜேம்ஸ் கேமரூன் எடிட்டிங் செய்ய, இசையமைப்பாளர் சைமன் பிராங்லென் இசையமைத்துள்ளார்.

  அவதார் 2 திரைப்படத்தின் கதை

  அவதார் முதல் பாகத்தில் மனிதர்களுக்கும் நாவி இன மக்களுக்கும் இடையே நடக்கக்கூடிய போரில் நாவி இன மக்கள் வெற்றி பெறுகின்றனர். ஆனால் மனிதர்களால் நாவி இனமக்கள் வாழ்ந்து வந்துள்ள இடம் மற்றும் வாழ்வாதாரம் முற்றிலுமாக சேதம் அடைந்துவிடுகிறது .

  இதனால் காட்டை விட்டு நாவி இன மக்கள் நீரில் வாழ முடிவெடுத்து தனது கூட்டத்துடன் வேறு இடத்திற்கு செல்கின்றனர். நாவி இன மக்களோடு நாயகன் மற்றும் அவரின் குழுவும் உடன் செல்கிறது. நீரில் வாழும் நாவி இன மக்களோடு வாழும் நாயகனை பின் தொடர்ந்து மீண்டும் மனிதர்கள் படையெடுக்கிறார்கள். பின் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie அவதார்: தி வே ஆப் வாட்டர் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).