பேட் பாய்ஸ் ஃபார் லைப் இயக்குனர் அடில் மற்றும் பிலால் இயக்கத்தில் வில் ஸ்மித், மற்றும் மார்ட்டின் லாரென்ஸ் இனைந்து நடிக்கும் நடிகைச்சுவை கலந்த அதிரடி திரைப்படம். ஹாலிவுட் திரைப்பட பிரபல நடிகரான வில் ஸ்மித் தயாரிப்பாளராக இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் லார்ன் பல்ஃஎ இசையமைத்துள்ளார்.
அமெரிக்கா காவலர்களின் நகைச்சுவை மற்றும் அட்டகாசமான அதிரடி படமாக உருவான பேட் பாய்ஸ் படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தினை கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து, சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை விநியோகம் செய்துள்ளது.