பிரத்மார்க் - இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர், மிர்னா, போர்க்கொடி செந்தில் என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை இப்பட இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் மற்றும் ஸ்ரீராம் சிவராமன் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
பர்த்மார்க் திரைப்படத்தின் கதை
கார்கில் போருக்கு பின்னர் சில வீரர்கள் 'post war trauma' எனும் பாதிப்பில் சிக்கி மனதளவில் பல சிக்கல்களை சந்தித்தனர். அதில், ஒரு ராணுவ வீரராக பர்த்மார்க் படத்தில் ஷபீர் கல்லரக்கலை காட்டுகின்றனர். டேனியலாக ஷபீரும் அவருடைய மனைவி ஜெனிஃபராக மிர்ணாவும் நடித்துள்ளனர். கர்ப்பமான மனைவியை இயற்கை முறையில் பிரசவம் பார்க்கவும் தனக்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளவும் தன்வந்திரி குழந்தைபேறு கிராமத்திற்கு தனது மனைவியை அழைத்துச் செல்கிறார் நாயகன். ஒரு கட்டத்தில், அந்த குழந்தைக்கு நாம தான் அப்பாவா? என்கிற சந்தேகம் அவருக்குள் துளிர்விட தனது மனைவியின் பிரசவத்தை சுக பிரசவமாக மாற்றினாரா? அல்லது மனைவியை என்ன செய்தார் என்பது தான் இந்த பர்த்மார்க்கின் கதை.