X
டெவில்
Drama | Thriller | 02 Feb 2024 | U/A | 118 Mins
Tamil

டெவில் கதை

டெவில் - இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, சுபா ஸ்ரீ, த்ரிகுன் என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திகில் - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தயாரிக்க, தமிழ் திரைப்பட பிரபல முன்னணி இயக்குனராக மிஸ்க்கின் இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

திகில் - திரில்லர் திரைக்கதையில் சுவாரஸ்யமாக உருவாகியுள்ள டெவில் படத்திற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் இளையராஜா எஸ் எடிட்டிங் செய்துள்ளார்.

2024 பிப் மாதம் 2ல் உலகமெங்கும் வெளியாகும் டெவில் படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. 



டெவில் திரைப்படத்தின் கதை

திருமணமான விதார்த் - பூர்ணா சில நாடககளுக்கு பிறகு தகாத உறவில் சிக்குகின்றனர், இதனால் ஏற்படும் விளைவுகள் தான் 'டெவில்' திரைப்படத்தின் கதைக்கரு.

கதை

வழக்கறிஞரான விதார்த் பூர்ணாவை திருமணம் செய்துக் கொள்கிறார். ஆனால், இருவருக்கும் கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆகவில்லை. அதற்கு பதிலாக பூர்ணாவுக்கு வேறொரு இளைஞர் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்த கதாபாத்திரத்தில் நடிகர் திரிகுன் நடித்திருக்கிறார். அதே போல விதார்த்துக்கு நடிகை சுபஸ்ரீ மீது ஆசை உண்டாகிறது. பூர்ணாவும் திரிகுனும் ஒன்றாக இருக்கும் போது விதார்த் பார்த்து விடுகிறார். அதே போல விதார்த்தும் சுபஸ்ரீயும் கெமிஸ்ட்ரியை வொர்க்கவுட் செய்யும் போது பூர்ணா பார்த்து விடுகிறார். பிறகு என்ன ஆகிறது ஜோடி மாறுகிறதா? இடையே ஹாரர் எஃபெக்ட்டில் படம் எங்கே செல்கிறது என்பது தான் இந்த டெவில் படத்தின் கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+