எக்கோ இயக்குனர் நவின் கணேஷ் இயக்கத்தில் ஸ்ரீகாந்ந், வித்யா பிரதீப் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை பற்றிய அறிவிப்பு 2020 அக்டோபர் 5ல் இணையதளத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை உடன் வெளியானது.
எக்கோ கதை
பல வருடங்களுக்கு பின் அசத்தலான கதைக்களத்தில் ஸ்ரீகாந்த் மீண்டும் தமிழ் சினிமாவில் நாயகனாக களமிறங்கியுள்ளார். எக்கோ சத்தம் கேட்பதால் இவருக்கு நடக்கும் இன்னல்கள் தான் இந்த படத்தின் கதை.
தனது அம்மாவின் ஆசைக்காக காதலியை மறந்து வித்யா பிரதீப்-யை திருமணம் செய்து கொள்கிறார், ஸ்ரீகாந்த். இவர்கள் சந்தோசமாக வாழ்கின்றனர். வித்யா ப்ரதீபிக்கு பேய் படம் பார்த்ததால் பயம் வருகிறது. இதனை பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இருக்கும் ஸ்ரீகாந்த், ஒரு கட்டத்தில் வித்யா பிரதீப் பயத்தால் தற்கொலை செய்து கொள்கிறார்.
பின் ஸ்ரீகாந்த் தனது காதலி பூஜாவுடன் வாழ தொடங்குகிறார். பின் ஒரு சில நாட்களில் ஸ்ரீகாந்திற்கு மீண்டும் அதே குரல் கேட்கிறது. பின் என்ன ஆனது என்பதே இந்த படத்தின் திரில்லர் திரைக்கதை.