ஃப்ரோஸன் 2 ஹாலிவுட் திரையில் செயற்கை தோற்றம் மற்றும் கற்பனைகளில் உருவாக்கப்படும் அனிமேஷன் திரைப்படங்களில் 2013-ம் ஆண்டு வெளியாகி 2 ஆஸ்கார் விருதுகளை அள்ளிய ஃப்ரோஸன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக 2019-ம் ஆண்டு வெளியாகும் திரைப்படம்.
ஃப்ரோஸன் 2 ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ் பக் மற்றும் ஜெனிஃபேர் லீ இயக்கத்தில் தயாரிப்பாளர் பீட்டர் டெல் வெச்சோ தயாரிப்பில் உருவாகும் நகைச்சுவை மற்றும் மாயாஜால திரைப்படம். இத்திரைப்படத்தில் லேடின மென்ஸில், கிறிஸ்டன் பெல், ஜொனாதன் குரஃப் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஃப்ரோஸன் 2 திரைப்படத்தின் தகவல்கள்
மாயாஜால கற்பனை கொண்டு உருவாகியுள்ள இப்படத்தினை வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து, விநியோகம் செய்துள்ளது.
இத்திரைப்படம் 2013-ம் ஆண்டு வெளியான ஃப்ரோஸன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது, மேலும் 2013-ல் வெளியான ஃப்ரோஸன் திரைப்படத்தில் தங்கையின் காதலை பொறுக்க முடியாத அக்கா எலிசா தனது ராஜ்யத்தையே உறைய வைத்து விட்டு போக, சூர்ய ஒளியை கொண்டு வர ஆன்னா போராடுவதும் இறுதியில் அக்காவை சந்தோஷப்படுத்தி ராஜ்யத்தை காப்பாற்றுவதுமாக சுபம் போட்டு முடித்துள்ளனர் படக்குழுவினர்.
இதனை தொடர்நது இத்திரைப்படத்தில் நாயகி எலிசாவிற்கு எப்படி அந்த சக்தி கிடைத்தது, பின் மாயாஜால உலகத்தினை பற்றி கூறுவது என இப்படத்தினை உருவாக்கியுள்ளார் இயக்குனர்.