கமனம் இயக்குனர் சுஜன ராவ் இயக்கத்தில் நடிகை ஸ்ரேயா சரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ரமேஷ் கருடூரி, வெண்கி புஷாடபு மற்றும் ஞான சேகர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் அதிகாரப்பூர்வமான தகவல்கள் 2020 செப்டம்பர் 11ல் இப்படத்தின் நாயகி ஸ்ரேயா சரன் பிறந்தநாள் முன்னிட்டு இணையத்தில் வெளியாகியது.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில் வெளியாகும் பேன் இந்திய படமாகும்.