ஜோ - இயக்குனர் ஹரிஹரன் ராம் எஸ் இயக்கத்தில் ரியோ ராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் அருளானந்து தயாரிக்க, இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார்.
எமோஷனல் காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ராகுல் கே ஜி விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் வருண் கே ஜி எடிட்டிங் செய்துள்ளார்.
2023 நவம்பர் 24ல் வெளியாகியுள்ள இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
ஜோ திரைப்படத்தின் கதை
இப்படத்தின் நாயகன் ரியோ ராஜ், இன்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் போது மாளவிகா மனோஜ் என்னும் மலையாள பெண்ணை பார்த்ததும் காதலில் விழுகிறார். தயங்கி தயங்கி ஒருவழியாக தனது காதலை சொல்லும் ரியோ, பின் இருவரும் கல்லூரியில் காதலித்து வருகின்றனர். கல்லூரி முடிந்ததும் ரியோ தனது பெற்றோரோடு பெண் கேட்க செல்கிறார். அதில் சில வாக்குவாதம் நீடிக்கிறது. தனது பெற்றோரை அவமதித்து விட்டனர் என ரியோ - மாளவிகா மனோஜ் இருவரும் கோபம் கொள்கின்றனர். பின் இருவருக்கும் வேறு ஒருவருடன் நிச்சியம் நடக்கிறது.
ரியோ ராஜ் - பவ்யா ட்ரிகா என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். ரியோ ராஜ் தனது முதல் காதலில் இருந்து மீண்டு வர முடியவில்லை. பின் ரியோ ராஜ் திருமண வாழ்வில் யாரும் எதிர்பார்க்காத வாறு சூழ்நிலைகள் மாறுகின்றன. பின் என்ன ஆனது என்பதே ஜோ திரைப்படத்தின் கதை.